பாஜகவை பலமாக எதிர்க்கும் ஒரே இயக்கம் திமுக தான்; அமைச்சர் ரகுபதி  

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில் தெற்கு மாவட்ட செயலாளரும் சட்டதுறை அமைச்சர் ரகுபதி முன்னிலையில் கடைகோடி தொண்டர்களுடன் கருத்து மற்றும் குறை கேட்கும் கூட்டம்.

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க கட்சியின் கடைகோடி தொண்டர்கள் தான் முக்கியம் என அவர்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்க அமைச்சர்களுக்கு உத்தரவிட்ட நிலையில் அதன் ஒரு பகுதியாக தெற்கு மாவட்ட செயலாளரும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மணமேல்குடி கட்டுமாவடி கோட்டைப்பட்டினம் அம்பலவணேந்தல் அறந்தாங்கி உள்ளிட்ட பகுதியில் நேரில் சென்று கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை கேட்டறிந்து மனுக்களாகவும் பெற்றுக் கொண்டனர்.

 அப்போது அவர் பேசுகையில் பாரதிய ஜனதா கட்சியை முடிவுக்கு கொண்டு வரும் ஒரே கட்சி திராவிட முன்னேற்ற கழகம் அவர்களை எதிர்க்க கூடிய வல்லமை படைத்த சக்தி ஆற்றல் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தான் உண்டு எனவே இந்த இயக்கத்தை மாசு படுத்த வேண்டும் என்ற கனவு கொண்டிருப்பது ஒருபோதும் நடைபெறாது இந்த இயக்கம் கடை கோடி தொண்டர்களை ஆணி வேராக நம்புகிறது. 

இந்தியாவிலேயே 2 கோடி உறுப்பினர்களைக் கொண்ட ஒரே இயக்கம் திமுக தான் இதில் அனைவரும் உண்மையான உறுப்பினராக உள்ளனர் அனைத்திந்திய அளவில் பெரிய கட்சிகளுடன் மாநிலக் கட்சி 40 தொகுதிகளை வைத்துக்கொண்டு ஆட்சி மாற்றத்தை கொண்டு வரும் வல்லமை படைத்து ஒரே இயக்கம் திமுக தான் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசினார்.

நிகழ்ச்சியில் மணமேல்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் சக்தி ராமசாமி மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் கார்த்திகேயன் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய தலைவர் மகேஸ்வரி சண்முகம் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *