இந்தி மொழியை திணிக்க முடியாது; எம்.பி.திருநாவுக்கரசர் எச்சரிக்கை

அமித்ஷா இந்தி மொழிபெயர்த்து பேசுவதால் இந்தி மொழியை திணிக்க முடியாது அவர் இது போன்று பேசியது கண்டனத்துக்குரியது முதலமைச்சர் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது நியாயமானது அதை நான் வரவேற்கிறேன், அதிமுக பாஜக கூட்டணி பொருந்தா கூட்டணி, பாஜகவில் அமித்ஷா பெரிய தலைவரா அண்ணாமலை பெரிய தலைவரா? 

கூட்டணியில் இருக்கும் கட்சியை அண்ணாமலை விமர்சனம் செய்கிறார் என்றால் அவரை அமித்ஷா அல்லது நட்டா கண்டிக்க வேண்டும் இல்லையென்றால் இதுபோல் செயல்படுகிறார் என்று எடப்பாடி பழனிச்சாமி கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் இதை விடுத்து தொடர்ச்சியாக இது போன்ற செயல்பாடுகள் இந்த கூட்டணியை கிண்டல் கேளிக்குறிய கூட்டணியாக தான் மக்கள் பார்ப்பார்கள், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை மாபெரும் தோல்வி அடைந்துள்ளது அந்த யாத்திரை திட்டும் யாத்திரையாக உள்ளது. புதுக்கோட்டையில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு பேட்டி

புதுக்கோட்டையில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் பங்கேற்க வருகை தந்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்:

ராகுல் காந்திக்கு கிடைத்திருக்கக்கூடிய தீர்ப்பு நீதிக்கு கிடைத்திருக்கும் தீர்ப்பு. தர்மம் வென்று இருக்கிறது. நீதி வென்று இருக்கிறது. ராகுல் காந்தி மீது மாபெரும் குற்றச்சாட்டு எதுவும் கிடையாது. சாதாரண பேச்சை அடிப்படையாக வைத்து மோடியின் சொந்த மாநிலத்தில் உள்ள நீதிமன்றத்தில் அநீதி இழைக்கப்பட்டது. 

ஆனால் மக்களுக்கு நீதித்துறை மீது நம்பிக்கை வரும் வகையில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. இந்த தீர்ப்பை அடுத்து பாராளுமன்றத்திலற்கு வர வேண்டும் நிச்சயம் வருவார். இந்தத் தீர்ப்பு சபாநாயகருக்கு பொயிருக்கும் ஏற்கனவே ரத்து செய்த எம்பி பதவி வந்துவிடும் அதற்கான அறிவிப்பை சபாநாயகர் அறிவிப்பார். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பங்கேற்பார்.

இந்த தீர்ப்பு வெளியானதற்கு பிறகு ராகுல் காந்தி தமிழ்நாட்டைச் சேர்ந்த முக்கியஸ்தர்களை சந்தித்து பேசிய முதல் நிகழ்ச்சி தமிழ்நாடு கிடைத்த வாய்ப்பு பெருமை. அது மகிழ்ச்சி தந்தது.  ராகுல் காந்தியை பொருத்தவரை தமிழ்நாட்டை நேசிக்க கூடியவர். தமிழ்நாட்டு மக்களும் ராகுல் காந்தி நேசிக்கின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறுபான்மை இன மக்களை பெருமைப்படுத்தி பேச வேண்டும் என்பதற்காக இவ்வாறு பேசினாரா என்று தெரியவில்லை, பொதுவாக அவர் யார் மனதையும் புண்படுத்தாமல் நாகரீகமான பேசவேண்டும். அவரது பேச்சை கேட்க ஒரு  கூட்டம் உள்ளது‌ அவரது பேச்சை ரசித்து கேட்கிறார்கள் ஆனால் அந்த 5 சதவீத வாக்கிற்காக சீமான் தமிழ்நாடு முழுவதும் செல்லவில்லை அதனால் அவர் புரிந்து பேச வேண்டும் என்பதை என்னுடைய அறிவுரை.

இந்தி மொழி குறித்து அமித்ஷா பேசியதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளது நியாயமானது அதனை நான் வரவேற்கிறேன்.  இந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அமித்ஷா பேசுவதால் இந்தியை திணிக்க முடியாது அமித்ஷாவுக்கு பயந்து யாரும் இல்லையே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் இந்தியை அவர்களால் விருப்பப்படி படிப்பது என்பது வேறு இந்தியை திணிப்பது என்பது வேறு.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை செல்லும் இடங்களில் பெரிதளவில் வரவேற்பு இல்லை பணம் கொடுத்து சில இடங்களில் கூட்டத்தை கூட்டியுள்ளனர். மொத்தத்தில் அவர் பாதயாத்திரை செல்லவில்லை ஒரு சட்டமன்ற தொகுதியில் இறங்கி சிறிது தூரம் நடந்து விட்டு செல்கிறார் இந்த பாதயாத்திரையை பொருத்தவரை தோல்வியை கண்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் சென்று அந்த தொகுதியில் எதிர்க்கட்சியாக உள்ளவர்களை திட்டி விட்டு செல்கிறார் மொத்தத்தில் இந்த யாத்திரை திட்டும் யாத்திரையாக தான் உள்ளது.

அதிமுக பாஜக கூட்டணியை பொறுத்த வரை பொருந்தாத கூட்டணி தான் வ அண்ணாமலை வேகமாக பேசுகிறாரே தவிர விவேகமாக பேசவில்லை, கட்சித் தலைவர் என்று கூறிக்கொண்டு கூட்டணியில் இருப்பவர்களையே விமர்சனம் செய்தால் இது என்ன அரசியல். எது மாதிரியான அரசியல் புரிதல்.

பாஜகவில் அமித்ஷா பெரிய தலைவரா அண்ணாமலை பெரிய தலைவரா? கூட்டணியில் இருக்கும் கட்சியை அண்ணாமலை விமர்சனம் செய்கிறார் என்றால் அவரை அமித்ஷா அல்லது நட்டா கண்டிக்க வேண்டும் இல்லையென்றால் இதுபோல் செயல்படுகிறார் என்று எடப்பாடி பழனிச்சாமி கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் இதை விடுத்து தொடர்ச்சியாக இது போன்ற செயல்பாடுகள் இந்த கூட்டணியை கிண்டல் கேளிக்குறிய கூட்டணியாக தான் மக்கள் பார்ப்பார்கள் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *