கம்பன் விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்; தெலுங்கான ஆளுநர் தமிழிசை கோரிக்கை

விழுப்புரத்தில் 40வது ஆண்டு கம்பன் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நிகழ்ச்சியில் உரையாற்றினார் அப்பொழுது அவர் பேசுகையில்

தமிழகத்தில் பல கழகங்கள் தோன்றுவதற்கு முன்பாகவே கம்பன் கழகங்கள் தோன்றியுள்ளன. தமிழை உறக்க பேசியவர்கள் கூட கம்பனை சரியாக பேசவில்லை என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. தமிழ் இல்லாமல் ஆன்மிகம் இல்லை. ஆன்மீகம் தான் தமிழை வளர்த்தது. ஏனோ தமிழ்நாட்டில் தமிழ் என்பது ஆன்மீகம் இல்லாதது போலவும் ஆன்மீகத்திற்கும் தமிழுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போலவும் ஒரு உருவகம் கொண்டு வரப்பட்டுள்ளது. 

தமிழும் ஆன்மீகமும் பிரிக்க முடியாதது. இயல்பாகவே தாமரை பற்றி பேச வேண்டும் என்றால் எனக்கு பிடிக்கும். இன்றைய காலகட்டத்தில் நாட்டை ஆண்டுக்கொண்டிருப்பவர்கள் சில தவறுகளை சுட்டிக் காண்பித்து சோதனை நடத்தினால் அவர்களுக்கு நெஞ்சு வெளியே வந்து விடுகிறத. இந்த உலகத்தை எப்படி பசுமையாக வைத்திருப்பது என்பதை ஜி-20 மாநாடு மூலமாக நாம் உலகிற்கு சொல்லிக் கொண்டிருக்கிறோம். 

முன்பு ஏதாவது தீர்வு வேண்டுமென்றால் உலகத்தை இந்தியா நோக்கிக் கொண்டு இருந்தது ஆனால் இன்றைக்கு உலகத்திற்கு ஏதாவது ஒரு தீர்வு வேண்டும் என்றால் இன்று உலகம் இந்தியாவை நோக்கிக் கொண்டிருக்கிறது அதற்கு காரணம் நம் நாட்டின் இதிகாசங்கள். இன்னொரு மொழியை படிப்பதனால் தாய்மொழி நிச்சயமாக அழிந்து போகாது. தமிழை அழிக்க யாராலும் முடியாது. தமிழை அழிப்பதற்கு யாராலும் முடியாது. 

இன்னொரு மொழியால் தமிழை அழிக்க முடியாது. தமிழால் தான் மற்ற மொழிகள் வாழும். இன்னொரு மொழியை நாம் படிக்கும் பொழுது மற்ற மொழிகளில் உள்ள நல்ல சாஸ்திரங்களை தமிழ் மொழிக்கு கொண்டு வர முடியும் தமிழில் உள்ள நல்ல சாஸ்திரங்களை மற்றவர்களுக்கு படிக்க கொடுக்க முடியும் என பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன் ராமனை பாடியதால் கம்பரை தமிழ்நாட்டில் கொண்டாடாமல் விட்டுவிட்டனர். கம்பன் கழகங்கள் எப்படி கம்பரை போடுகின்றனவோ அதே போல அரசியல் கழகங்களும் கம்பனை போற்ற வேண்டும். கம்பனுக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கவில்லை. கம்பன் விழாவை அரசு விழாவாக நடைபெற வேண்டும் என்பது என்னுடைய கருத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *