‘அரசியல் விஞ்ஞானி’ என்று செல்லூர் ராஜூவை கலாய்த்த அண்ணாமலை…!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில்   பிஜேபி மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த 28ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பாதயாத்திரை பயணம் என்ற பெயரில் பிரச்சாரத்தை   தொடங்கினார். கடந்த 6 நாட்களில் ராமநாதபுரம் சிவகங்கை புதுக்கோட்டை  மாவட்டங்களில் பல்வேறு ஊர்களிலும் பயணத்தை முடித்துக்கொண்டு  இன்று மாலை 7வது நாள் பாதயாத்திரையாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்க்கு மாலை வருகை தந்தார் 

முன்னதாக காலை   புதுக்கோட்டை மாவட்டத்தில் முடித்துவிட்டு காரைக்குடியில் தங்கியிருந்த அண்ணாமலை திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் பாதையாத்திரை பயணத்தை 50 கார்களில்  சுமார் 1000 பேருடன் திருப்பத்தூரில் தென்மாபட்டு என்ற இடத்திற்கு வந்து அவர்களோடு பாதயாத்திரை தொடங்கினார் 

தொடர்ந்து தேரோடும் வீதி நாலுரோடு சந்திப்புபேருந்து நிலையம் வந்து அங்கிருந்து பெரிய கடை வீதிவழியாக செட்டியதெரு அண்ணா சிலை மதுரை ரோடு வழியாக மீண்டும் பேருந்து நிலையத்தை அடைந்து அங்கு வேனில் நின்று பிரச்சாரம் மேற்கொண்டார் மோடி அரசின் 9 ஆண்டுகால சாதனை பட்டியலை எடுத்துரைத்தும் மாநில திமுக அரசுசெய்யாத வாக்குறுதிகளை எடுத்துரைக்கும் 2024 தேர்தலுக்கான பிரச்சாரமாக உரையாற்றினார் 

பின்னர் செய்தியாளர்களை கண்டிஷன் போட்டு சந்திக்கும் போது அண்ணாமலை அளித்த பேட்டியில் நாங்கள் யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை என்றும் மக்களை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கிறோம் மக்களே எங்களுக்கு  எஜமானர்கள் என்று தெரிவித்தார். அண்ணாமலை குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதற்கு பதில் அளித்தபோது. அரசியல் விஞ்ஞானிகள் என்று நினைத்து கொண்டிருப்பவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லி என் தரத்தை நான் தாழ்த்திக் கொள்ள விரும்ப வில்லை என்றார் .

மெஜாரிட்டி, மைனாரிட்டி  பாலிடிக்ஸ் தான் தமிழ்நாட்டில் அதிகம்  உள்ளதாக தெரிவித்த அண்ணாமலை, மைனாரட்டி, மெஜாரிட்டி என்பது ஒரு புரிதலுக்காக கொண்டு வரப்பட்டது என்றும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் மைனாரிட்டி என்ற வார்த்தைகளுக்கு மட்டும் தான், சிறப்பு சலுகைகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் எச் ராஜா உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் பங்கேற்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *