ஜெயலலிதாவுக்கு சிசேரியனில் பிறந்த குழந்தை ஓபிஎஸ்… அதிமுக திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு

அதிமுக பொன்விழா ஆண்டு விழாவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இது தொடர்பாக தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. தேனி பெரியகுளத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், வளர்மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில்,  சசிகலா கும்பத்தால் தான் ஜெயலலிதா சிறை சென்றார். தினகரனால் அடையாளம் காட்டப்பட்டவர் தான் ஓபிஎஸ். இந்த மாவட்டத்திற்கு அவர் செய்த சாதனை தான் என்ன? போடியில் தப்பித்தவறி வெற்றிபெற்று விட்டார். ஏதோ எம்ஜிஆரின் வப்பாட்டிக்கு பிறந்தது போல், எம்ஜிஆரின் வாரிசு என்கிறார் பன்னீர் செல்வம். ஜெயலலிதாவுக்கு சிசேரியனில் பிறந்த குழந்தை மாதிரி, அம்மாவின் வாரிசு என சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசினார்.

மேலும் எம்ஜிஆரை பற்றி பேசுவதற்கு,  ஜெயலலிதாவை பற்றி பேசுவதற்கு ஓ.பன்னீர்செல்வத்திற்கும் டிடிவி தினகரன் ஆக்கும் என்ன அருகதை இருக்கிறது? என்ன தகுதி இருக்கிறது. ஒரு விபச்சாரி, நான் தான் குலப்பெண். கணவரை வைத்து வாழ்கிறேன் என்று சொன்னால் எவ்வளவு கேவலமோ? அது போல பெரிய கேவலம் இங்கே ஓ.பன்னீர்செல்வமும், டி.டி.வி தினகரனும் கூட்டம் போட பேனர் வைத்திருப்பது. இது 1972 இல் இருந்து கட்சியின் தொண்டர்களாக இருந்த  எங்களைப் போன்றவர்களுக்கு அவமானம். 

நான் அம்மாவின் தம்பி,  அம்மாவின் மகன் என்று சொல்கிற ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அவரை எதிர்த்து போடிநாயக்கனூர் தொகுதியில் ஜானகி அணியில் போட்டியிட்ட வெண்ணிற ஆடை நிர்மலாவிற்கு ஆதரவாக பூத் ஏஜெண்டாக இருந்தாரா இல்லையா? ஜெயலலிதாவை ஒழிக்க வேண்டும் என்று சொன்னாரா இல்லையா? இப்படிப்பட்ட இந்த மகாத்மா காந்தி சொல்கிறார் நாங்கள் எல்லாம் அம்மாவின் வாரிசு என்று. 

தெய்வம் என்ற ஒன்று இருந்தால் டிடிவி தினகரன் குடும்பத்தை நாசமாக போக வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த வீட்டுக்கு ரெண்டகம் செய்தவன் எவனும் உருப்பட்டதே இல்லை. அதிமுக கட்சி, அம்மா பேரைச் சொல்லி கொள்ளையடித்த பணத்தை அந்த கட்சி அழிவுக்காகவே பயன்படுத்தும் இவர்களை போகும் வழியிலேயே கடவுள் தண்டிப்பார். ஜெயலலிதா மற்றும் டி.டி.வி.யால்  கொள்ளையடிக்கப்பட்ட  பணத்தை  நல்ல வழியில் செலவு செய்யுங்கள் என்று தினகரனை சாடினார்.

தொடர்ந்து பேசிய அவர் ஓபிஎஸ் மகன் ரவியை தொலைபேசியில் கூட பேசமுடியவில்லை அப்பாய்மென்ட் வாங்க வேண்டும் என்கிறார் அவரது உதவியாளர். கட்சியின் மூத்த நிர்வாகிக்கே இந்த நிலை என்றால், வாக்களித்த மக்களின் நிலை என்ன என்று எண்ணி பார்க்க வேண்டும் என்றார். ஓ.பன்னீர் செல்வமா? எடப்பாடியா? என்று பார்த்தால் நூற்றுக்கு நூறு மார்க் எடப்பாடிக்குத்தான். 

நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வாங்கிக் கொடுத்தவர் எடப்பாடியர்.எடப்பாடி முதல்வராக நான் ஏன் தேர்தலில் உழைக்க வேண்டும் என்று இருந்தவர் ஓபிஎஸ். இந்தியா என்ற பெயரில் எதிர்கட்சிகளால் உருவாக்கப்பட்ட கூட்டணியை நான் வரவேற்கிறேன் என்று ஓபிஎஸ் கூறுகிறார். இப்போது தெரிகிறது அவரது நிலைப்பாடு என்ன ஆ‌ தைரியம் இருந்தால் ஓ.பி.எஸ் தனி கட்சி துவங்கி வெற்றி பெறட்டும் என பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *