அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து பாமக கண்டன ஆர்ப்பாட்டம்…!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு  நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு நிலம் எடுப்பது தொடர்பான பிரச்சனையில் என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்திய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாமக்கல் மேற்கு மாவட்ட பாமக சார்பில் மாவட்ட செயலாளர் சுதாகர் தலைமையில் திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு நிலம் எடுப்பது தொடர்பான பிரச்சனையில் என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்திய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாமக்கல் மேற்கு மாவட்ட பாமக சார்பில் மாவட்ட செயலாளர் சுதாகர் தலைமையில் திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது இதில் 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள். 

ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் தி ந சுதாகர் அவர்கள் தலைமை வகித்தார்.  மாநில உழவு பேரியக்கம் தலைவர் பொன் ரமேஷ் மாவட்ட அமைப்பு தலைவர் செந்தில் திருச்செங்கோடு நகர செயலாளர் பூக்கடை சுரேஷ் சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில் மாவட்டத் துணைச் செயலாளர் கோடீஸ்வரன் குமாரபாளையம் நகர செயலாளர் கோவிந்தன் செந்தில் பசுமைத்தாயகம் மாவட்ட செயலாளர் ராமசாமி மாவட்டத் துணை தலைவர் சௌந்தரம் மாவட்ட இளைஞர் அணி தலைவர் விமல் மாவட்ட அன்புமணி தம்பிகள் படை செயலாளர் கோபிநாத் அருள் அருண் மாதையன் வேல்முருகன் கௌதம் கனகவேல் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் ஆர்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் சுதாகர், மற்றும்மாநில உழவு பேரியக்கம் தலைவர் பொன் ரமேஷ் ஆகியோர் கூறியதாவது 

முறையாக மூன்று முறை போராட்டம் நடத்தி நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய நியாயம் கிடைக்காததால் இன்று என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிட முயன்ற பாமக தலைவர் எங்கள் சின்னையா அன்புமணி ராமதாஸ் அவர்களை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்திருக்கும் தமிழக காவல்துறையை கண்டித்து இன்று திருச்செங்கோட்டில் நாமக்கல் மேற்கு மாவட்ட பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் 

எந்த வித நிபந்தனையும் இன்றி அன்புமணி அவர்களை விடுதலை செய்யும் வரை எங்கள் போராட்டம் ஓயாது கைது நடவடிக்கை தொடருமானால் தமிழகமே குலுங்கும் அளவுக்கு ஒரு போராட்டத்தை பாமக நடத்தும் என தமிழக காவல்துறையையும் தமிழக அரசையும் எச்சரிக்கிறோம் என கூறினார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *