பாஜக மணிப்பூர் பற்றி மூச்சே விடுவது இல்லை, தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கை பேசலாமா? ஆ.ராசா கேள்வி 

தமிழகத்தில் சின்ன ஒரு பிரச்னை என்றாலும் உடனே திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறி ஆட்சியை கலைக்க வேண்டும் என கூறும் பாஜகவினர் முதலில்  மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் நடந்து வருவதால் அங்கு புடுங்கிவிட்டு அதன் பிறகு தமிழ்நாட்டில் வந்து புடுங்குங்கள் என்று தூத்துக்குடியில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா  பொதுக்கூட்டத்தில்  துணை பொதுசெயலாளரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.ராசா ஆவேசமாக பேசினார். 

தூத்துக்குடியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் பொதுக்கூட்டம் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே நடைபெற்றது.  

இதில் திமுக துணை பொதுச்செயலாளரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.ராசா, மேயர் ஜெகன் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட  ஏராளமானோர் கலந்துகொண்டனர் . இதில் துணை பொதுச்செயலாளரும்  திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா பேசும்போது

தமிழகத்தில் திமுக ஆட்சியில் எப்போதாவது எங்கையாவது பிரச்சனை நடந்தால் சட்டம் ஒழுங்கு சரியில்லை முதல்வர் சரியில்லை ஆட்சியை கலைக்க வேண்டும் என்று பாஜகவினர் கூறுகின்றனர் ஆனால் பாஜக ஆளும் மணிப்பூர் மாநிலத்தின் நிலை என்ன தெரியுமா அங்குள்ள முதல்வர், கவர்னர் மத்திய அமைச்சர் வெளியில் வர முடியாத சூழ்நிலை உள்ளது. 

மோடி அருகில் இருக்ககூடிய கேபினட் அமைச்சர் வீடு சூறையயாடப்பட்டுள்ளது 200-தேவாலயங்கள் இடிக்கப்பட்டு இருக்கின்றது எனவே  தமிழகத்தில் ஆட்சியை கலைக்க வேண்டும் என்றும் ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எனவும் நினைக்கும்  மத்திய அரசு முதலில் நீங்கள் ஆளும் மணிப்பூரில் புடுங்கிவிட்டு தமிழகத்தில் வந்து புடுங்கு என  ஆர்.ராசா எம்பி ஆவேசமாக பேசினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *