எம்.பி ரவீந்திரநாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்… டாக்டர் கிருஷ்ணசாமி கோபம்

அதிமுக முன்னாள் எம்பி ரவீந்திரநாத் முறைகேடு உறுதி செய்யப்பட்டதால் உயர் நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் மேல் முறையீடு செய்யக்கூடாது. திண்டுக்கல்லில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.

திண்டுக்கல்லுக்கு இன்று 06.07.23 வருகை தந்த புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில் :- பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான காரணத்தை மத்திய அரசு முதலில் அறிவிக்க வேண்டும். பொது சிவில் சட்டம் எதற்காக கொண்டு வரப்பட உள்ளது என்ற காரணத்தை பொதுமக்களிடம் மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். 

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்பி ரவீந்திரநாத் மேல் முறையீடு செய்தாலும் முறைகேடு என்பது முறைகேடு தான். உயர் நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். மேல் முறையீடு செய்வது என்பது சரி இல்லை. மாநிலத்தில் எந்தெந்த பகுதியில் எந்தெந்த காய்கறிகள் அதிக அளவில் விளைகிறது என்பதை மாநில அரசு கணக்கு எடுத்து வைத்திருக்க வேண்டும்  காய்கறி விலை உயர்வுக்கு மாநில அரசே பொறுப்பு ஏற்க வேண்டும் தமிழகத்தில் தற்பொழுது 60% பேர் மது போதைக்கு அடிமைப்பட்டு விட்டார்கள். 

ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்வை டாஸ்மாக் கெடுத்துக் கொண்டிருக்கின்றது. இளைஞர் மத்தியில் மது பழக்க வழக்கத்தை தடுத்து நிறுத்த வேண்டும் இப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் தமிழகத்தில் 500 கடைகளை மட்டும் மூடிவிட்டு மதுவிலக்கு அமல்படுத்துவதாக காட்சிப்படுத்துகின்றனர் இது ஏற்றுக் கொள்ள முடியாது தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளையும் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என புதிய தமிழகம் கட்சி சார்பில் தமிழகத்தில் 100 இடங்களில் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது முதல் நாளான இன்று விளாத்திகுளத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. ஆகஸ்ட் மாதம் 15 ம் தேதிக்குள் தமிழகத்தில் பூர்ண மது விளக்கை அரசு அமல்படுத்த வேண்டும். 

இல்லையென்றால் மதுவிலக்குக்கு எதிரான அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள், ஆகியோரை ஒன்றிணைத்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும். சட்டவிரோதமாக நடைபெற்று வந்த பார்களை காவல்துறையினர் மூடி உள்ளனர். மூடப்பட்ட சட்ட விரோத பார்கள் மீண்டும் செயல்பட காவல்துறையினர் அனுமதி அளிக்கக் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *