காவிரி நதிநீர் விவகாரம்!- துரைமுருகன் டெல்லி பயணம்!

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லி சென்று, காவிரி மேலாண்மை அதிகாரிகளை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேகதாது அணை கட்டுவதில் கர்நாடகா அரசு உறுதியாக இருந்து வருகிறது.. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் அரசியல் பொறுப்புணர்ந்து பேச வேண்டும் என்றம், அரசியலுக்காக இதுபோன்று பேசி காலத்தையும், நேரத்தையும் வீணாக்க வேண்டாம், ஒருபோதும் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைக்கட்டும் முயற்சிகளை மேற்கொண்டால், அதற்கு தமிழகமே எதிர்த்து நிற்கும் என்றும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.அத்துடன், தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை தடையின்றி கொடுக்க வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுள்ளதால், இதை கர்நாடகா அரசு மதித்து செயல்பட வேண்டும், தமிழகத்திற்கான பங்குகளை கர்நாடகா அரசு வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள்களை விடுத்து வருகின்றன.

இப்படிப்பட்ட சூழலில்தான், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.. நேற்று செய்தியாளர்களிடம் துரைமுருகன் பேசியபோது, “நீர்வளத்துறையில் நீரை எப்படி சிக்கனமாக பயன்படுத்தி நீரை பாதுகாப்பது என்பதில் உலகத்திலேயே முன்னோடி நாடாக டென்மார்க் உள்ளது. சென்னையில் உள்ள 3 ஆறுகளை சீரமைக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களிடம் உள்ளது.எனவே இது குறித்து டென்மார்க் அரசிடம் பேச நாங்கள் விருப்பம் தெரிவித்திருந்தோம். இது குறித்து டென்மார்க் அமைச்சரும் விரிவாக பேசினார்கள். இன்னும் ஒருவாரத்தில் அவர்கள் அதிகாரி இங்கு வருகிறார்கள். அவர்களோடு நேரில் பேசிய பிறகு ஒரு திட்டம் வகுக்கப்படும் என்ற உறுதியோடு வந்துள்ளோம். சென்ற பயணம் நல்லதாக அமைந்தது. ஆற்றில் உள்ள ஆகாயத்தாமரை எடுத்து எருவாக டென்மார்க் நாட்டினர் மாற்றி உள்ளார்கள். அது குறித்தும் ஆய்வு செய்தோம்.

காவிரி நிர்வாகத்தை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் ஒப்படைத்துள்ளது. ஆகவே அவர்கள் நிலைமை என்ன? நீர்நிலை என்ன? என்பது கூறித்து எனக்கு தெரியாது. இருந்தாலும் நாங்கள் கர்நாடகத்தில் சென்று பேச முடியாது அப்படி பேசுவது சட்டப்படி தவறு. எனவே நான் காலையில் முதலமைச்சரை சந்தித்த பிறகு நானே டெல்லி சென்று காவிரி நீர் மேலாண்மை வாரிய அதிகாரிகளை சந்திப்பேன். நாங்கள் பின் வாங்கமாட்டோம், கட்டிவிடுவோம் என்று அரசியலில் வீரமாக பேசலாம் ஆனால் எந்த காரணத்தை கொண்டும் தமிழ்நாடு அதை அனுமதிக்காது சட்டப்படியும் அது முடியாது. அப்படி எடுக்கவே முடியாது, வேணும் என்றால் பேசிட்டு இருக்கலாம். அவர்கள் ஏதோ பெரிசாக செய்துவிடுவார்கள் என்று நினைக்கிறீர்கள். என்னை பொறுத்த வரை அதெல்லாம் அரசியல் ஸ்டெண்ட் என்பதை தவிர எதும் செய்ய முடியாது. அது அந்த அமைச்சர்களுக்கு இருக்க வேண்டும்.காரணம் நாம் இருவரும் அண்டை மாநிலங்கள் ஏராளமான தமிழர்கள் கர்நாடகத்தில் வசிக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் பாதகம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதுதான் இரண்டு அரசுகளின் போக்கு அதை நாங்கள் உணருகிறோம். உள்ளப்படியே அவரும் உணருவார் என கருதுகிறேன்” என்று கூறியிருந்தார்.. இந்நிலையில், அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்று, காவிரி மேலாண்மை அதிகாரிகளை சந்திக்க உள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *