என்ஜினியரிங் மாணவர்களுக்கு தரவரிசை பட்டியல் வெளியானது !

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

தமிழ்நாட்டில் என்ஜினியரிங் படிப்பு கலந்தாய்வுக்கு ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 693 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்த நிலையில், அவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.தமிழ்நாட்டில் உள்ள 440-க்கும் மேற்பட்ட என்ஜினியரிங் கல்லூரிகள் இருக்கின்றன. இதில் பி.இ., பி.டெக். போன்ற என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு, அதன் மூலமாக மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.2023-24-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 693 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர்.கடந்த ஆண்டில் 1 லட்சத்து 69 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அந்தவகையில் தற்போதையை புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டைவிட அதிகமாக விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆன்லைன் வாயிலாக கடந்த 20-ந்தேதி நிறைவு பெற்றது.சான்றிதழை சரியாக பதிவேற்றம் செய்து, தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை அலுவலகத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே வெளியிட்டு இருந்த அட்டவணைப்படி தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 2ம் தேதி தொடங்கவுள்ளது என்றும், கட் ஆஃப் மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசை பட்டியலை http://tneaonline.org என்ற இணையதளத்தில் பார்க்கலாம் என்றும் அமைச்சர் பொன்முடி கூறினார். 102 மாணவ,மாணவிகள் 200க்கு 200 கட் ஆப் எடுத்துள்ளனர் என்றும், மாணவிகளே அதிக அளவில் ரேங்க் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்கள் என்றும் அமைச்சர் பொன்முடி கூறினார்.இதனிடையே கணிதத்தில் 690 பேர் மட்டுமே முழு மதிப்பெண் பெற்றுள்ளதால் இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்பு உருவாகி உள்ளது. அதேநேரம் வேதியியல் மற்றும் இயற்பியல் பாடங்களில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 100 மதிப்பெண்கள் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.வேதியியல் பாடத்தில் கடந்த ஆண்டு 1,500 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு 3,909 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதேபோன்று இயற்பியல் பாடத்தில் கடந்த ஆண்டு 634 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு 813 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கணித பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றவர்கள் எண்ணிக்கை 3 மடங்கு குறைந்துள்ள நிலையில் வேதியியல் மற்றும் இயற்பியல் பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்றவர்கள் எண்ணிக்கை 2 மடங்கு மட்டுமே அதிகரித்துள்ளது. இதனால் என்ஜினீயரிங் படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது..எனவே நாளை தரவரிசை பட்டியல் வெளியிடும் போது என்ன என்பது தெரியவரும்.என்ஜினியரிங் வகுப்பு எப்போது தொடங்கும்? முதலாம் ஆண்டு வகுப்புகளில் உள்ள காலியிடங்களில் மாணவர் சேர்க்கை என்பது செப்டம்பர் 15-ந்தேதிக்குள் நிரப்பப்பட வேண்டும். அவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 15-ந்தேதி முதல் தொடங்கப்படும். அதேபோல், நேரடியாக 2-ம் ஆண்டில் சேரும் மாணவர்களும் செப்டம்பர் 15-ந்தேதிக்குள் சேர வேண்டும் முதுநிலை மேலாண்மை டிப்ளமோ படிப்புகளிலும் மாணவர் சேர்க்கை செப்டம்பர் 15-ந்தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். தொலைதூர, திறந்த நிலை மற்றும் ஆன்லைன் படிப்புகளை கற்றுத்தரும் கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *