6 மாநில முதல்வர்கள் பங்கேற்பு !பொது வேட்பாளர்கள் குறித்து ஆலோசனை!

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

பாட்னாவில் தற்போது நடைபெற்று வரும் அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 6 மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தக் கூட்டத்தில் லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிராக பொதுவேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.2024-ம் ஆண்டு லோக்சபா பொதுத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்று வருகிறது. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இந்த ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளார்.

இன்றைய கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இடதுசாரிகள், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட 16 கட்சிகளின் தலைவர்களும் இந்த ஆலோசனையில் இணைந்துள்ளனர்.இன்றைய ஆலோசனையில், நாடு முழுவதும் லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மத்தியில் ஆளும் பாஜகவின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அத்துடன் லோக்சபா தேர்தலை எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து எதிர்கொள்ளும் வகையில் குறைந்தபட்ச செயல்திட்டம் ஒன்றை உருவாக்குவது தொடர்பாகவும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *