கலைஞருக்கு பீகார் துணைமுதல்வர் தேஜஸ்வி யாதவ் புகழாரம் !

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

கருணாநிதி கடைபிடித்த சமூக நீதி, சமத்துவம் போன்ற கொள்கைகளை தேசிய அளவில் செயல்படுத்துவது அவசியம் என்று கலைஞர் கோட்டம் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறினார்.திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடியில் 7,000 சதுர அடி பரப்பளவில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பங்கேற்றார். பின்னர் விழாவில் பேசியதாவது:- சமூக நீதிக்கான வருங்கால நமது போராட்டங்களுக்கு கருணாநிதியின் கொள்கைகள் வழிகாட்டும். கருணாநிதி கடைபிடித்த சமூக நீதி, சமத்துவம் போன்ற கொள்கைகளை தேசிய அளவில் செயல்படுத்துவது அவசியம்.

திராவிட கருத்தியலை நிலை நிறுத்தியதில் முக்கிய தலைவராக கருணாநிதி விளங்கினார். கருணாநிதியின் கொள்கைகளும் சிந்தனைகளும் இன்றளவும் அவசியமாக இருப்பதை நினைவு கூறவே இங்கு கூடியிருக்கிறோம். கருணாநிதியின் சிந்தனைகள் அடுத்தத்தடுத்த தலைமுறையிடம் செல்வாக்கு செலுத்தி வருகிறது. சமூக நீதியை காப்பதில் மிகப்பெரும் பங்காற்றியவர் கருணாநிதி சாதி ரீதியான வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் அனைவரும் சமமாக வாழ வேண்டும் என வலியுறுத்தினார்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *