ஜல்லிக்கட்டு போராட்டம் மட்டுமில்லை எல்லா போராட்டத்தையுமே அதிமுக அபாயகரமாகதான் அனுகியது…

Udayanithi

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடையில்லை என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி தீர்ப்பை பெற்றுக் கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஜல்லிக்கட்டு பேரவை உள்ளிட்ட அமைப்புகள் சார்பில்  தஞ்சை திருச்சி சாலையில் புதுக்கோட்டை அருகே உள்ள சிவபட்டியில் நன்றி அறிவிப்பு விழா நடைபெற்றது. 

இதில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர்கள் கேன்.நேரு, ரகுபதி பெரிய கருப்பன் ராதாகிருஷ்ணன் எஸ் எஸ் சிவசங்கர் மூர்த்தி மையநாதன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா,  ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர், திருச்சி ராஜேஷ் மற்றும் ஜல்லிக்கட்டு அமைப்புகளை சேர்ந்தவர்களும் சுமார் முப்பதாயிரம் பொதுமக்களும் பங்கேற்றனர்.

அதில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீங்கள் தமிழ்நாடு அரசுக்கு நன்றி கூற வந்து உள்ளீர்கள் நான் வந்துள்ளது உங்களுக்கு நன்றி சொல்ல வந்துள்ளேன்.‌ ஏனென்றால் ஜல்லிகட்டு போராட்ட வெற்றி என்பது அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டதற்கான வெற்றி. அந்தப் போராட்டம் தான் வாடிவாசலை திறக்க வைத்தது.

ஜல்லிகட்டு தீர்ப்புக்கு ஒரு புறம் அதிமுக கொண்டாடி வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு தடை விதைத்ததே அதிமுக ஆட்சியில் தான். அதற்கு பிறகு என்ன நடந்தது என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல் மாணவர்கள் களத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். டிசம்பர் 2016 இல் வெறும் 5 பேரில் ஆரம்பித்த போராட்டம் ஜனவரி 2017 முதல் வாரத்தில் உலக முழுவதும் பரவியது. மெரினாவில் ஒட்டுமொத்த தமிழ்நாடே திரண்டு நின்று ஜல்லிக்கட்டு ஆதரவாக போராட்ட களத்தில் இருந்தது. அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக போராட்டக்காரர்களை அழைத்துப் பேசி தீர்வு ஏற்பட எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

அதற்கு மாறாக போராட்டக்காரர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியது தான் அதிமுக அரசு. ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களுக்கு உதவிய வீரர்கள் வீடுகள் கொளுத்தப்பட்டது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தேச விரோதிகள் நுழைந்து விட்டார்கள் என்று போராட்டத்தை கலைக்க பார்த்தார்கள். ஜல்லிக்கட்டு போராட்டம் மட்டுமல்ல எந்த ஒரு போராட்டத்தையுமே அதிமுக அரசு முறையாக கையாளவில்லை, அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்டமாக இருந்தாலும் ஹைட்ரோ கார்பன் போராட்டமாக இருந்தாலும் அந்தந்த போராட்டங்களை எப்படி அதிமுகவினர் கிடைத்தார்கள் என்பது உங்களுக்கு தெரியும். 

2016ல் குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எதையாவது செய்து உள்ளே நுழைவதற்கு முயற்சி எடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி அதிமுக கட்சியை பாஜகவின் கிளை கழகம் போல் வைத்துள்ளார்கள். அனைவருமே அதிமுகவை போல் இருக்க மாட்டார்கள் என்பதற்கு உதாரணம் தான் ஜல்லிக்கட்டு போராட்டம். அதிமுக ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஒடுக்க நினைத்தபோது குரல் கொடுத்தவர் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் தற்போதைய முதலமைச்சர் மு க ஸ்டாலின். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *