செந்தில் பாலாஜியை எதுவும் செய்ய முடியாது, நாங்கள் இருக்கும் வரை அது நடக்காது… முத்தரசன் எச்சரிக்கை

தேசிய அளவில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்கும் திமுக மீது களங்கம் ஏற்படுத்தி அக்கட்சியை தனிமை படுத்த வேண்டும் என்ற உள்நோக்கில் தான் வருமான வரித்துறையும், அமலாக்க துறையும் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, அலுவலகம் , தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறைகளில் சோதனை நடத்துவதாகவும், இது ஜனநாயக படுகொலை என்றும், இச்சம்பவத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டங்களில் ஈடுபடும் என்றும் முத்தரசன் இன்று இரவு கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம்  பேசும்போது தெரிவித்தார்.

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி அலுவலகம் ,வீடு, தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறை போன்றவற்றில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்க துறையினர் மேற்கொண்டுள்ள சோதனை என்பது ஜனநாயக படுகொலை என்றும் இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என்றும் ,

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை கையில் கட்டி உள்ள கடிகாரம் அதன் விலை, ரசீது போன்றவற்றை கேட்டவர் செந்தில் பாலாஜி, அது முதற்கொண்டு செந்தில் பாலாஜி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எந்த அதிகாரத்திலும் இல்லாத அண்ணாமலை தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து சமீபத்தில் செந்தில் பாலாஜி உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இந்நிலையில் இன்று செந்தில் பாலாஜியின் வீடு, அலுவலகம் , தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறை போன்றவற்றில் துணை ராணுவத்தினர்  உதவியோடு சோதனை நடைபெறுகிறது இது கண்டிக்கத்தக்கது.

ஒன்றிய பாஜக அரசை திமுக கடுமையாக எதிர்த்து  வருவதுடன், தேசிய அளவில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்கி வருகிறது. இதன் கூட்டம் எதிர்வரும் 24 ஆம் தேதி பாட்னாவில் நடைபெற உள்ளது.

திமுக மீது குற்றம் சாட்டி அதனை களங்கப்படுத்த வேண்டும் , தவறான குற்றச்சாட்டுகளை கூறி  திமுகவை தனிமைப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கில் திட்டமிட்டு அமலாக்க துறையும், வருமானவரித்துறையையும் ஒன்றிய பாஜக அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது.

ஒன்றிய அரசின் அடிமை துறைகளாக வருமான வரித்துறையும், அமலாக்க துறையும் செயல்பட்டு வருவதாகவும் முத்தரசன் குற்றம் சாட்டினார். ஒன்றிய அரசின் இந்த செயலை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டங்கள் நடத்தும் என முத்தரசன் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *