தென்னிந்தியாவில் பாஜகவின் காவிக் கொடி பறக்கும் ! – எஸ்.வி.சேகர்

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

தென் பிராந்திய பாஜகவிலிருந்து இந்த 5 பேர் விலகினால் மட்டுமே அந்த கட்சி வளர்ச்சி அடையும் என எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.தமிழக பாஜகவில் கடந்த சில தினங்களாக நிறைய விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்துள்ளன. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எடுக்கும் அதிரடி முடிவுகளால் மூத்த தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஒரு முறை அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் நான் தலைவர் பதவியிலிருந்து விலகி விடுவேன் என்றும் தொண்டனாக கட்சிக்கு சேவையாற்றுவேன் என்றும் தெரிவித்திருந்தார். பொதுவாக கூட்டணி விவகாரம் , தொகுதி பங்கீடு எல்லாம் டெல்லி தலைமைதான் முடிவெடுக்கும்.ஆனால் அண்ணாமலையோ திடீரென அதிமுகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என கூறிவிட்டால் இதனால் அதிர்ச்சி அடைந்த சில மூத்த நிர்வாகிகள் அங்கேயே எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக எஸ்.வி.சேகர் அண்ணாமலைக்கு எதிராக பேசி வருகிறார். அவருடைய செயல்பாடுகளை விமர்சித்து வருகிறார். இதனால் அவருக்கு கொலை மிரட்டல் வந்ததாக கூட காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் அண்ணாமலையின் வார் ரூமை சேர்ந்தவர்கள் சிலர் எஸ்.வி.சேகரை சமூகவலைதளங்களின் மூலம் கடுமையாக ஒருமையில் விமர்சனம் செய்து வருகிறார்கள் என சொல்லப்படுகிறது. இவர்களை எஸ்.வி.சேகர் பிளாக் செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.இந்த நிலையில் ட்விட்டர் ஸ்பேஸில் நேற்றைய தினம் அண்ணாமலையின் வார்ரூம் அரசியல் குறித்தும் பிராமணர்களுக்கான தனி கட்சி குறித்தும் பேசியிருந்தார்.

அப்போது அவர் அண்ணாமலையின் வார்ரூம் அரசியல் மிகவும் அபத்தமானது. கருத்தை கருத்தால் எதிர்கொள்ளாமல் குடும்பத்தினரை இழிவாக பேசினால் பயந்து கொண்டு ஓடி விடுவார்கள் என நினைக்கிறார்கள். ஆனால் நான் அப்படி இல்லை. என்னை விமர்சித்தால் பதில் சொல்வேன். என் குடும்பத்தை விமர்சித்தால் நான் யாரென்று கூட பார்க்காமல் கடுமையான பதிலடியை கொடுப்பேன் என கூறியிருந்தார். அது போல் அண்ணாமலை தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டாலும் அவர் புதிய கட்சியை தொடங்குவார் என்றும் கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *