“பம்பரமாய்” சுற்றும் ஸ்டாலின்-ஜப்பானிலிருந்து திரும்பிய கையோடு டெல்டா பயணம்!

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

ஜூன் 5 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் நீர் நிலைகள் மற்றும் வாய்கால்கள் தூர்வாரும் பணிகளை அவர் ஆய்வு செய்ய உள்ளார்.தமிழ்நாட்டின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க அண்மையில் உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்களை வைத்து சிறப்பான வாதங்களை முன்வைத்ததே, இந்த வழக்கில் வெற்றிபெற்றதற்கு காரணம் என்று கூறப்பட்டது.இந்த நிலையில், ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர அனுமதி பெற்றுத் தந்ததற்காக தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் புதுக்கோட்டையில் வரும் ஜூன் 5 ஆம் தேதி பாரட்டு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, பி மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று ஜப்பானில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டையில் ஜூன் 5 ஆம் தேதி நடைபெற இருக்கும் பாராட்டு விழாவில் கலந்துகொள்ள இருக்கிறார். இதற்காக புதுக்கோட்டை வரும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அத்துடன் டெல்டா மாவட்டங்களிலும் ஆய்வு செய்ய உள்ளார்.மேட்டூர் அணையில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி டெல்டா மாவட்ட விவசாயிகள் பாசனம் செய்வதற்காக காவிரியில் நீர் திறக்கப்படுவது வழக்கம். இதன் மூலம், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுடன் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் பாசன வசதி பெறுகின்றன.

குறிப்பாக நெற்களஞ்சியம் என்று கூறப்படும் தஞ்சாவூரை உள்ளடக்கிய டெல்டா மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் உள்ளது. இந்த நிலையில் வரும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் செல்லும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அணையில் நீரை திறந்து வைக்க இருக்கிறார்.குறுவை சாகுபடிக்காக தயாராகி வரும் விவசாயிகள் முழுமையாக பயனடையும் வகையில், தண்ணீர் செல்லும் வாய்கால்கள், நீர்வழித்தடங்களை தூர்வாரும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் காவிரி நீர் வழித்தடங்களில் குடிமராமத்து பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளார்.

Rea more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-cm-stalin-travel-to-delta-districts-on-june-5-to-inspect-water-bodies-514209.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *