மனம் மாறிய மம்தா !தேசிய அளவில் மாறும் காட்சி… -ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவி ஏற்கும் நிகழ்வில் பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்க முடிவு செய்துள்ளனர். எதிர்க்கட்சிகள் சங்கமிக்கும் நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.கர்நாடகாவின் முதல்வராக சித்தராமையா அந்த கட்சி சார்பாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். துணை முதல்வராக டிகே சிவக்குமார் தேர்வாகி இருக்கிறார். இவர்கள் வரும் சனிக்கிழமை பதவி ஏற்க உள்ளனர்.கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகள் உள்ளன. அங்கே மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும். அங்கு எண்ணப்பட்ட வாக்குகளில் பாஜக 66 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மஜத மொத்தம் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக படுதோல்வி அடைந்த நிலையில் முதல்வர் பொம்மை அங்கே பதவியை ராஜினாமா செய்துள்ளார். தற்போது புதிய அரசு பதவி ஏற்கும் வரை அவர் காபந்து முதல்வராக தொடர்வார்.காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் எல்லோருமே இந்த பதவி ஏற்பு விழாவிற்கு வர உள்ளனர். இது போக பாஜக அல்லது மாநில முதல்வர்களான, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், என்சிபி தலைவர் சரத் பவார், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகியோருக்கு கர்நாடக காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

இது போக பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டு தலைவர் பரூக் அப்துல்லா, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸிலிருந்து, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு ஆகியோருக்கு அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.இதில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இந்த நிகழ்விற்கு செல்வது உறுதியாகிவிட்டது. அதேபோல் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ். மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் இந்த பதவி ஏற்பு நிகழ்விற்கு செல்வது உறுதியாகிவிட்டது.கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவி ஏற்கும் நிகழ்வில் பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்க முடிவு செய்துள்ளனர். எதிர்க்கட்சிகள் சங்கமிக்கும் நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. முக்கியமாக காங்கிரஸ் வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு இருந்த மமதா பானர்ஜி தற்போது காங்கிரஸ் வெற்றியை பார்த்து இறங்கி வந்துள்ளார். சமீபத்தில் சென்னையில் தனது பிறந்தநாள் விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகாலமாக வெற்றிபெற்றதற்கு ஒற்றுமை தான் காரணம். இந்த ஒற்றுமை தேசிய அளவில் இருக்க வேண்டும். தமிழ்நாட்டை போல் ஒற்றுமையான கூட்டணியை தேசிய அளவில் அமைக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டாலே வெற்றி நிச்சயம். அதுதான் இப்போது முக்கியம். காங்கிரஸ் அல்லாத கூட்டணிக்கு விடுக்கும் வாதங்களை நிராகரிக்க வேண்டும்.

அரசியல் கட்சிகள் விட்டுக்கொடுத்து பாஜகவுக்கு எதிராக ஒன்றுசேர வேண்டும். காங்கிரஸ் இல்லாமல் கூட்டணி அமைக்க கூடாது. அப்படியே அமைத்தாலும் அது கரை சேராது. தேர்தலுக்கு பின் கூட்டணி என்பதும் நடைமுறைக்கு சரியாக இருக்காது. தேர்தலுக்கு முன்பே கூட்டணி அமைக்க வேண்டும். காங்கிரஸ் அல்லாத கூட்டணிக்கு விடுக்கும் வாதங்களை நிராகரிக்க வேண்டும். 2024ல் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை விட யார் ஆட்சியமைக்க கூடாது என்பதே முக்கியம் என்று மு.க.ஸ்டாலின் பேசி இருந்தார். ஆனால் காங்கிரசுடன் சேர மறுத்த மம்தா பானர்ஜி, லோக்சபா தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தனியாக போட்டியிடும். நாங்கள் காங்கிரசுடன் கூட்டணி வைக்காமல் மக்களுடன் கூட்டணி வைப்போம். காங்கிரஸ், பாஜக எல்லாம் ஒன்றுதான். அதனால் அவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம். கம்யுனிஸ்டுகளுடன் காங்கிரஸ் நெருக்கமாக இருக்கிறது. அப்படிப்பட்ட காங்கிரசுடன் நாங்கள் எப்படி நெருக்கமாக இருப்போம், என்றார்.ஆனால் கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு பின் மனமாற்றம் அடைந்த மம்தா பானர்ஜி.. சித்தராமையா பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளார். கடந்த 3 வருடங்களில் காங்கிரஸ் முதல்வர் ஒருவரின் பதவி ஏற்பு விழாவில் இவர் கலந்து கொள்வது இதுவே முதல்முறை. அதேபோல் காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ள இடங்களில் காங்கிரசும், மாநில கட்சிகள் வலுவாக உள்ள இடங்களில் மாநில கட்சிகளும் போட்டியிட்டு கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் மம்தா பானர்ஜி கூட்டணிக்கான கதவை திறந்து உள்ளார். தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர் ராவ் மட்டும் இந்த வருட மாநில தேர்தல் காரணமாக காங்கிரஸ் மீது கோபத்தில் உள்ளார். அவரை தவிர மற்ற பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கர்நாடக தேர்தல் முடிவு காரணமாக ஒரு குடைக்கு கீழ் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *