“தக் லைப்” கவிதா ராமு!டிரான்ஸ்பரான புதுக்கோட்டை ஆட்சியர்! -ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

வேங்கைவயலில் பட்டியலின மக்களின் குடிநீர் தொட்டியில் மலம் கொட்டிய விவகாரம் தொடர்பாக, அந்த கிராமத்துக்கே சென்று கோயிலுக்குள் தலித்துகளை அழைத்து சென்ற புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவும் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு நேற்று பல்வேறு மாவட்டங்களில் செயலாளர்கள் பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார். அதன்படி நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கடலூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.அரியலூர் மாவட்ட ஆட்சியராக அன்னீ மேரி ஸ்வர்னா நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேகப் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். கிருஷ்ணகிரி ஆட்சியராக சராயு நியமனம் செய்யப்பட்டு உள்ளார். திண்டுக்கல் ஆட்சியராக பூங்கொடி நியமிக்கப்பட்டு இருக்கிறார்.காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக கலைச்செல்வி மோகன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக கமல் கிஷோர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். மதுரை மாவட்ட ஆட்சியராக சங்கீதாவும் சிவகங்கை மாவட்ட ஆட்சியராக ஆஷா அஜித் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக மெர்சி ரம்யாவை நியமனம் செய்திருக்கும் தமிழ்நாடு அரசு, நாமக்கல் மாவட்ட ஆட்சியராக உமாவை நியமித்து உள்ளது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக விஷ்னு சந்திரன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக ராகுல்நாத் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியராக கிருஸ்துராஜ் நியமனம் செய்யப்பட்டு உல்லார். ஈரோடு ஆட்சியராக ராஜ கோபால் சுங்கரா நியமனமிக்கப்பட்டு உள்ளார். இதில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக தற்போது மெர்சி ரம்யா நியமிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இதற்கு முன் ஆட்சியராக இருந்த கவிதா ராமு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக கவிதா ராமு இருந்தபோதுதான் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட இறையூர் அருகே வேங்கைவயலில் ஏற்பட்ட இந்த நிகழ்வு மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியராக இருந்த கவிதா ராமு, புதுக்கோட்டை எஸ்பி ஆகியோர் நேரில் ஆய்வு செய்ய சென்றார். அப்போது உயர்சாதியினர் தலித் மக்களை கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பதாகவும், மாநிலத்தில் இரட்டை குவளை முறை தொடர்வதாகவும் தலித் மக்கள் அவரிடம் தெரிவித்தனர்.

உடனே தலித் மக்களை அழைத்துக்கொண்டு கவிதா ராமு கோயிலுக்குள் சென்றார். இதனை எதிர்த்து அங்கேயே ஒரு பெண் சாமியாடி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது தொடர்பாக சாமியாடிய பெண், இரட்டை குவளை முறையை கடைபிடித்த தேனீர்கடை உரிமையாளர் உட்பட 4 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கவிதா ராமுவின் இந்த செயல் அப்போது பல்வேறு பாராட்டுக்களை பெற்றது. அதே நேரம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்கள் யார் என்று கண்டுபிடித்து மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அரசு மீது உள்ளது. இந்த நிலையில் கவிதா ராமு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *