முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம் – காரணம் என்ன?

Tamilnadu

தமிழகத்தில் 13 முக்கிய துறைகளைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

முதலமைச்சரின் முதன்மைச்செயலாளராக உள்ள உதயச்சந்திரன் நிதித்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். நிதித்துறை முதன்மை செயலாளராக இருந்த முருகானந்தம், முதலமைச்சரின் தனிச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன் பொதுப்பணித்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி போக்குவரத்துத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பெருநகர மாநகராட்சியின் ஆணையராக ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமுதா, உள்துறை செயலாளராக நியமனமிக்கப்பட்டுள்ளார்.

போக்குவரத்துத்துறை செயலாளர் கோபால், லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக நியமியக்கப்பட்டுள்ளார்.

சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன் பொதுப்பணித்துறை செயலாளராக மாற்றம்.

உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி போக்குவரத்துத்துறை செயலாளராக நியமனம்

பள்ளி கல்வி ஆணையர் நந்தகுமார் மனிதவள மேம்பாட்டு துறைக்கு இடமாற்றம் செய்து உத்தரவு

காரணம் என்ன?

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு அமைச்சரவை 3வது முறையாக மாற்றியமைக்கப்பட்டது. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தொழில்நுட்பத்துறைக்கு மாற்றப்பட்டார். பால்வளத்துறை அமைச்சர் நாசர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக டி.ஆர்.பி. ராஜா அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து தமிழக அரசின் முக்கிய துறைகளைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்படுவது உண்டு. வழக்கமான நடவடிக்கையின் படி 13 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அமைச்சரவை மாற்றப்பட்ட நிலையில், வழக்கமான நடைமுறையாகவே ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *