இது தான் திராவிட மாடல்!நேரடியாக ஆளுநருக்கே பதில் தந்த ஸ்டாலின்

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

எல்லாருக்கும் எல்லாம் என்பது தான் திராவிட மாடல்.. சாதி, மதத்தால் மக்களை பிரிக்க நினைப்பவர்களுக்கு திராவிட மாடல் என்றால் புரியாது. மக்களுக்கு சம்பந்தமில்லாத பொறுப்பில் உள்ளவர்களுக்கு திராவிட மாடல் என்றால் தெரியாது.. என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், 2 ஆண்டுகளில் செய்த சாதனைகள் குறித்து திராவிட மாடல் என்றால் என்ன என்பது குறித்தும் இன்று பேசினார்.சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், இரண்டாண்டுகளுக்கு முன் இதே நாளில் முதலமைச்சர் பொறுப்பில், தமிழ்நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டுச் செல்ல முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டேன்.

என் மனதிற்கு தெம்பும் தைரியமும் கொடுத்தவர்கள் பெரியார், அண்ணா, கலைஞர்தான்!”மக்களுக்கு பணியாற்றுவது எனக்கு புதிதல்ல, சிறுவனாக இருந்துபோதே திராவிட இயக்கத்திற்கு என்னை ஒப்படைத்துக் கொண்டேன். தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பேருக்கும் தான் நான் முதலமைச்சர்; அவர்களுக்காக ஓய்வின்றி என் சக்திக்கும் மீறி பணியாற்றி வருகிறேன். திராவிட மாடல் என்றால் என்ன என கேட்பவர்களுக்கு நான் பதில் சொல்ல போவதில்லை. மக்கள் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சிதான் பதில்; எல்லாருக்கும் எல்லாம் என்பது தான் திராவிட மாடல். சாதி, மதத்தால் மக்களை பிரிக்க நினைப்பவர்களுக்கு திராவிட மாடல் என்றால் புரியாது, மக்களுக்கு சம்பந்தமில்லாத பொறுப்பில் உள்ளவர்களுக்கு திராவிட மாடல் என்றால் தெரியாது. ஆட்சியின் முகம் அதிகாரம் அல்ல அன்பு, சனாதனம் அல்ல சமூகநீதி அதனால், சிலரால் அரசு விமர்சிக்கப்படுகிறது. சிலரால் நேசிக்கப்படுகிறது.2 ஆண்டு சாதனைகளை நான் சொல்லி முடிக்க வேண்டும் என்றால் நீங்கள் 2 நாட்கள் இங்கேயே தங்கி கேட்க வேண்டி இருக்கும். பெரும்பாலான கோரிக்கைகைளை நாம் நிறைவேற்றி உள்ளோம். இருண்டு கிடந்த தமிழ்நாட்டில் விடியலை ஏற்படுத்தியுள்ளோம்.மக்களின் மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் என்னை இன்னும் உழைக்க ஊக்குவிக்கும், உங்களில் ஒருவனாக உங்களோடு ஒருவனாக இருப்பேன். மக்களுக்கு சம்மந்தமில்லாத பதவியில் இருப்பவர்களை பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. இந்த ஆட்சியின் முகம் சனாதானம் அல்ல.. சமூக நீதி” என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *