“தொட்டதெல்லாம் துலங்குதா”.. ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் ஏன் அப்படி சொன்னார்?

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

இன்றைய தினம் மாநாட்டில், சில முக்கிய அறிவிப்புகளை ஓபிஎஸ் அறிவிக்க போகிறாராம்.. இதனால் திருச்சி மாநாட்டின் எதிர்பார்ப்பு கூடி வருகிறது.நேற்றைய தினம் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, எடப்பாடி தரப்பை கடுமையாக சாடியிருந்ததுடன், அதிமுக விதிமுறைகள் பற்றியும் தெளிவாக கூறியிருந்தார்.. குறிப்பாக, “அதிமுகவின் தலைமை அலுவலகம் ஜானகி அம்மையார் எம்ஜிஆருக்கு தந்தது.. அது எடப்பாடி பழனிச்சாமிக்கு சொந்தமானது அல்ல. கட்சி இயங்குவதற்கு தொண்டர்கள் முக்கியம், அதை வெற்றி பெற செய்ய மக்கள் ஆதரவு முக்கியம். அதிமுகவில் தொண்டர்களின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு இருக்கிறதா, ஓபிஎஸ்க்கு இருக்கிறதா என்பதை மாநாட்டின் மூலம் தெரிந்து கொள்வீர்கள் என்றார்.ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை, எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து இந்த மாநாட்டை நடத்தவில்லையாம்.. சமீபகாலமாகவே பாஜகவால் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக வருத்தத்தில் உள்ள நிலையில், மேலிடத்துக்கு தங்களை நிரூபிக்கவே மாநாட்டை நடத்துவதாக சொல்கிறார்கள்.. ஆனால், ஓபிஎஸ் போடும் கணக்குகள் எல்லாம் இன்று ஈடேறுமா என்று தெரியவில்லை.. காரணம், இதுவரை கசிந்துவரும் தகவல்கள் எதுவுமே ஓபிஎஸ்ஸூக்கு பிளஸ் பாயிண்ட்டாக தெரியவில்லை.

முதலாவதாக, சசிகலா மற்றும் டிடிவி. தினகரன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் 2 பேரும் கூட்டத்தை புறக்கணித்துள்ளதாக தெரிகிறது.. சாதி முத்திரை குத்தப்பட்டுவிடக்கூடாது என்பதில் இருவருமே அலர்ட்டாக இருப்பதாகவும், அதனாலேயே மறைமுகமான ஆதரவை ஓபிஎஸ்ஸுக்கு தெரிவித்து வரும் நிலையில், அதே நிலைப்பாட்டையே தொடர்வார்கள் என தெரிகிறது..அடுத்ததாக, திருச்சி மாநாட்டிற்கு தன்னெழுச்சியாக பெருந்திரளான தொண்டர்கள் வருவார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் நம்பிக்கையுடன் கூறியுள்ளார். அப்படியானால், ரவீந்திரநாத்துக்கு இந்த நம்பிக்கையை தந்தது யார்? வேறு முக்கிய நிர்வாகிகள் அவரிடம் பேசி இந்த நம்பிக்கையை தந்தார்களா? அல்லது அந்த அளவுக்கு கூட்டத்தை திரட்ட செலவு செய்துள்ளார்களா? என்பது தெரியவில்லை.. ஆனால், 5 ஆயிரம் பேர் வரை வரலாம் என்று எதிர்பார்ப்பதாக, ஓபிஎஸ் தரப்பில் நேற்றில் இருந்து சொல்லப்பட்டு வருகிறது.

ஆனால், இப்போதுவரை எதிர்பார்த்த அளவிற்கு கூட்டம் இல்லாததால் விழா நடைபெறும் இடம் வெறிச்சோடி காணப்படுகிறதாம்.. ஒருவேளை மாலையில் இந்த கூட்டம் அதிகரிக்கலாம் என்றும் தெரிகிறது.. இதற்கு நடுவில், மாநாடு குறித்து பெரியகுளத்தில் எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்-ஐ கும்பிடுவது போன்று வைக்கப்பட்ட பேனரை அகற்ற போலீசாரிடம் புகார் கொண்டு போனார்கள் எடப்பாடியின் ஆதரவாளர்கள்..இதனால், போலீசாரே உத்தரவிட்டு அந்த பேனர்களை அகற்ற வைத்தனர். எடப்பாடி தரப்பு கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தும் ஓபிஎஸ் தரப்பின் செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசில் புகாரளித்தாலும் இது குற்றவியல் நடவடிக்கை கிடையாது, சிவில் பிரச்சனை.. அதனால் கோர்ட் மூலம்தான் நீங்கள் பிரச்சனையை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று வழக்கு பதிவு செய்ய போலீசார் மறுப்பதாகவும் தெரிகிறது.. எம்ஜிஆர் மாளிகை: இந்நிலையில், ஓபிஎஸ்சின் சொந்த தொகுதியான போடி உட்பட தேனி, சின்னமனூர் ஒன்றியங்களிலிருந்து 300-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்கள் உற்சாகத்தோடு ஓபிஎஸ் வாழ்க + எடப்பாடி ஒழிக.என்று கோஷமிட்டபடி திருச்சிக்கு படையெடுத்துள்ளனர்.. 20 தடுப்புகள் அமைக்கப்பட்டு மொத்தம் 25000 நாற்காலிகள் போடப்பட்டுள்ளது… அதிமுக தலைமை அலுவலகமான ‘எம்ஜிஆர் மாளிகை’ போன்ற முகப்பு கொண்ட பிரமாண்ட மேடையும் போடப்பட்டுள்ளது.

மாலை 5 மணிக்கு லட்சுமன் ஸ்ருதி இசை நிகழ்ச்சியுடன் மாநாடு தொடங்குகிறது… மாநாட் டுக்கு அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்குகிறார் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வரவேற்று பேசுகிறார். மூத்த நிர்வாகிகள் வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ., ஐயப்பன், ஜேசிடி.பிரபாகர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.மாநாட்டு மேடைக்கு மாலை 6 மணிக்கு முன்னாள் ஓபிஎஸ் வருகை தருகிறார்… இரவு 7.30 மணிக்கு மேல் மாநாட்டு பேருரை ஆற்றுகிறார். அப்போது சில முக்கிய அறிவிப்புகள் வெளியாக போகிறதாம்.. குறிப்பாக, இந்த மாநாட்டின் தொடர்ச்சியாக வட மாவட்டத்திலும், சென்னையிலும் அடுத்தடுத்து மாநாடு நடத்த முடிவு செய்திருப்பதாகவும், அது தொடர்பான அறிவிப்புகளும் இன்று மாலை வெளியிடப்படலாம் என்கிறார்கள்.. அதேசமயம், இந்த மாநாட்டின் முடிவில், ஓபிஎஸ்ஸூக்கான நிஜபலமும் தெரிந்துவிடும் என்பதால், தமிழக அரசியலின் மொத்த கவனமும் திருச்சியில் குவிந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *