என்னது வெறும் 5 மணி நேரம்தான் வேலையா? எந்தெந்த நாடுகளில் தெரியுமா?

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

உலகின் பல நாடுகள் வேலை நேரத்தை குறைத்துக்கொண்டிருக்கையில் தமிழ்நாட்டில் வேலை நேரத்தை 8லிருந்து 12 மணி நேரமாக மாற்ற இந்த வழிவகுக்கும் மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சர்வதேச நாடுகளில் பின்பற்றப்படும் வேலை நேரங்கள் குறித்த தகவல்கள் சோஷியல் மீடியாவில் பரவி வருகின்றன.உலகில் புதிய கண்டுபிடிப்புகளும் அதற்கான தேவைகளும் 1800களின் மத்தியில் அதிகரிக்க தொடங்கின. இதனையடுத்து பல்வேறு தொழிற்சாலைகள் உருவாகின. இதைத்தான் தொழிற்புரட்சியின் காலம் என்று நாம் அழைக்கிறோம். மனிதர்களின் வாழ்கையை சிறப்பாக்குவதற்காக உருவாக்கப்பட்ட கருவிகளை தயாரிக்கும் தொழிலாளர்கள் கடுமையான உழைப்பு சுரண்டலுக்கு உள்ளானர்கள். இந்த கருவிகள் இவ்வாறு சுரண்டப்பட்டு கிடந்த தொழிலாளர்களுக்கு எவ்வித ஆசுவாசத்தையும் கொடுக்கவில்லை.இந்த தொழிலாளர்கள் 24 மணி நேரத்தில் 18 மணி நேரம் வரை வேலையில் ஈடுபடுத்தப்பட்டனர். குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாமலும், மருத்துவமனைக்கு கூட போக முடியாமலும் எப்போதும் வேலை வேலை என்றே கிடந்தனர்.

இதற்கு எதிராக தொழிலாளர்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த போராட்டம் ஏகப்பட்ட அடக்குமுறைகளை எதிர்கொண்டது. ஏகப்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தின்போது கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கானோர் போராட்டம் நடத்தியதற்காக வேலையிலிருந்து துரத்தப்பட்டனர். இருப்பினும் விடாபிடியா நடந்த போராட்டம் அந்த அதிசயத்தை நிகழ்த்தியது.அதாவது இனி தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை செய்தால் போதும் என்று முதலாளிகளை போராட்டம் ஒப்புக்கொள்ள வைத்தது. இவ்வளவு தியாகங்களுக்கு மத்தியில் பெறப்பட்ட 8 மணி நேரம் வேலை உரிமையை நீர்த்து போக செய்யும் விதமாக தமிழ்நாடு அரசு ஏப்ரல் 12ம் தேதி ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தியது. இந்த மசோதாவின்படி ஒருநாளைக்கு 12 மணி நேரம் வீதம் 4 நாட்கள் தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டும். பின்னர் தொழிற்சாலைக்கும் தொழிலாளர்களுக்கும் விருப்பம் இருந்தால் 5வது நாளும் வேலை செய்யலாம். அதற்கான ஊதியம் வழங்கப்படும் என்று கூறுகிறது. தமிழ்நாட்டில் முதலீடுகளை அதிகரிக்க இதுபோன்ற நடவடிக்கைகளை அரசு இந்த மசோதாவை நிறைவேற்றி இருப்பதாக அமைச்சர்கள் கூறுகின்றனர். இப்படி இருக்கையில், இந்த மசோதா கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சட்டமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. உலக நாடுகள் பலவற்றில் வேலை நேரத்தை 8லிருந்து 6 மணி நேரமாக குறைத்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் இப்படியொரு சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக திமுக கூட்டணி கட்சிகளே கூறியுள்ளன.

சரி இந்தியாவில் வேலை நேரம் சராசரியா 9-11 ஆக இருக்கிறது. அப்படியெனில் எந்தெந்த நாடுகளில் எவ்வளவு வேலை நேரம் தெரியுமா?பிரபல இணையதள செய்தி இதழான Huffington Post-ன் படி சராசரியாக ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்நாளில் 13 ஆண்டுகள் 2 மாதங்களை வேலையில் செலவிடுகிறான் என்று சொல்லப்படுகிறது. வாரத்திற்கு 40-45 மணி நேரம் வேலை பார்ப்பது சராசரியான வேலை நேரம் என்று உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இதற்கு அதிகமான நேரம் வேலை செய்வது தொழிலாளர்களின் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சர்வதேச தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன. அப்படியெனில் இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? நாம் அதிக நேரம் உழைக்கும் நாடுளின் பட்டியலில் முன்னணியில் இருக்கிறோம். 2019ம் ஆண்டு மத்திய அரசின் தேசிய புள்ளியியல் துறை இந்தியாவில் நேரப்பயன்பாடு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி நாம் வாரத்திற்கு 60 மணி நேரம் 47 நிமிடங்கள் உழைக்கிறோம் (ஒரு நாளைக்கு 9 மணி நேரம்). சரி அப்படியெனில் உற்பத்தி அதிகரித்து, தரம் உயர்ந்து நாட்டின் பொருளாதாரமும் உயர வேண்டும் அல்லவா? ஆனால் அதுதான் கிடையாது. இந்த உற்பத்தி மற்றும் தரம் பட்டியலில் இந்தியா கீழே இருக்கிறது. இந்த பட்டியலில் மேலே இருக்கும் நாடு ஜெர்மனிதான்.

ஜெர்மனியில் வாரத்திற்கு 26 மணி நேரம்தான் வேலை. அதாவது வாரத்திற்கு 5 நாள்தான் வேலை. அதேபோல ஒரு நாளைக்கு 5 மணி நேரம் 20 நிமிடங்கள்தான் வேலை இருக்கும். இந்த நாட்டில் ஒரு மணி நேரத்தில் தயாரிக்கப்படும் பொருட்களின் எண்ணிக்கை மற்றும் தரம் வேற லெவலில் இருக்கிறது. இதற்கடுத்துடென்மார்க் -26 மணி நேம் (வாரத்திற்கு) பிரிட்டன் -26 நார்வே -26 நெதர்லாந்து -27 ஆஸ்திரியா -27 பிரான்ஸ் -27 ஸ்வீடன் -27 லக்ஸம்பர்க் -27 ஐஸ்லாந்து -28 பெல்ஜியம் -28 சுவிட்சர்லாந்து -29 ஸ்லேவினியா -29 ஃபின்லாந்து -29 இத்தாலி -30 லாத்வியா -30 லித்துவேனியா -31 ஜப்பான் -31 போர்ச்சுக்கல் -31 கனடா -32 ஹங்கெரி -32 ஆஸ்திரியா -32 இந்த நாடுகள் எல்லாம் குறைவான வேலை நேரத்தை கொண்டிருக்கின்றன. ஆனால் உற்பத்தியில் மாஸ் காட்டுகின்றன. சரி இப்போது சராசரியான வேலை நேரத்தை கொண்டிருக்கும் நாடுகளை பார்க்கலாம். கிரீஸ் -33,நியூசிலாந்து -33 ஐயர்லாந்து -34 போலந்து -34 அமெரிக்கா -34 இஸ்ரேல் -34 சிலி -35 கொரியா -37 மெக்சிகோ -41 இதிலும் ஏறத்தாழ அனைத்து நாடுகளும் நல்ல பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளன. சரி கடைசியாக நம்ம லிஸ்ட்டுக்கு வருவோம். அதாவது அதிக வேலை நேரத்தை கொண்டிருக்கும் நாடுகளின் பட்டியல். கத்தார் -48 காம்பியா -49 அரபு எமிரேட்ஸ் -52 இந்தியா -60.47

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *