பங்குச்சந்தை | சென்செக்ஸ் 181 புள்ளிகள் சரிவு

-ஊடகவியலாளர் இராகவேந்திரன்

மும்பை பங்குச்சந்தையில் இன்று (செவ்வாய்க்கிழமை) வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 99 புள்ளிகள் உயர்வடைந்து 60,010 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 26 புள்ளிகள் உயர்ந்து 17,733 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கிய போதிலும், நிலையில்லாத வர்த்தகத்தால் வீழ்ச்சியைச் சந்தித்தது. காலை 10:15 மணி நிலவரப்படி, சென்செக்ஸ்181.19 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 59,729.56 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 28.25புள்ளிகள் சரிவடைந்து 17,678.60 ஆக இருந்தது.

இன்போசிஸ், டாடா கன்சல்டன்சி ஆகியவைகளின் காலாண்டு வருவாய் சரிவால் விளைந்த தகவல் தொழில்நுட்ப பங்குகளின் கடும் வீழ்ச்சியால் திங்கள் கிழமை வர்த்தகம் அதற்கு முந்தைய 9 நாள் லாபத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து நஷ்டத்தில் நிறைவடைந்தது. இந்தநிலையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தை சற்று ஏற்றத்துடன் துவங்கிய பங்குச்சந்தைகள் பின்னர் நிலையற்றதாக மாறியது. இதனால் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்தன.

தனிப்பட்ட பங்குகளைப் பொருத்தவரை டாடா மோட்டார்ஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், இன்டஸ்இன்ட் பேங்க், மாருதி சுசூகி, நெஸ்ட்லே இந்தியா, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், என்டிபிசி, ஹெச்டிஎஃப்சி பஜாஜ் ஃபின்சர்வ் பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. ரிலைன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டெக் மகேந்திரா, பவர் கிரிடு கார்ப்பரேஷன், டிசிஎஸ், டைட்டன் கம்பெனி, எல் அண்ட் டி, பஜாஜ் ஃபைனான்ஸ், எம் அண்ட் எம், பாரதி ஏர்டெல், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் சரிவில் இருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *