கண்ணகி கோயில் விழாவுக்கு பிற்பகல் 2.30 மணி வரையே அனுமதி: நெரிசல் அதிகரிக்க வாய்ப்பு

-ஊடகவியலாளர் இராகவேந்திரன்

கண்ணகி கோயில் சித்திரை மாத பவுர்ணமி திருவிழா மே 5-ல் நடை பெற உள்ளது. இதற்காக பிற்பகல் 2.30 மணி வரையே கோயிலுக்குச் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். அதிக பக்தர்கள் குறுகிய நேரத்தில் சென்று திரும்ப வேண்டி இருப்பதால் கடும் நெரிசல் ஏற்படும் என்று பக்தர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ள்ளனர்.

தமிழக எல்லையான கூடலூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் விண்ணேற்றிப்பாறை எனும் இடத்தில் மங்கலதேவி கண்ணகி கோயில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பவுர் ணமி அன்று இங்கு திருவிழா நடைபெறும். முன்னதாக தமிழக, கேரள அதிகாரிகள் சார்பில் முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதன்படி தேக்கடியில் நேற்று இக்கூட்டம் நடைபெற்றது.

தேனி மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர்கள் ஆர்.வி.ஷஜீவனா, இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷீபா ஜார்ஜ் ஆகியோர் தலைமை வகித் தனர். மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை சார்பில், 3 நாட்களுக்கு திருவிழா நடத்த வேண்டும். மாலை 4 மணி வரை கோயிலுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும்.

ஜீப்களுக்கு அனுமதி அட்டை பெறுவதில் உள்ள சிரமத்தை போக்க வேண்டும். பக்தர்களிடம் கேரள வனத்துறையினரின் கெடுபிடிகளை தளர்வு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கூட்டம் முடிந்த பிறகு தேனி ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா செய்தியாளர்களிடம் கூறியதாவது: காலை 6 மணிக்கு வழிபாடுகள் தொடங்கும். பிற்பகல் 2.30 மணி வரை கோயிலுக்குச் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். மாலை 5.30 மணிக்குள் பக்தர்கள் அனைவரும் வனப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும். பட்டாசு வெடிக்கக் கூடாது.

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. ஜீப்க ளுக்கான தகுதிச் சான்று மே 2 முதல் 4-ம் தேதி வரை குமுளியில் வழங்கப்படும். தமிழகத்தின் பளியன்குடி, தெள்ளுக்குடி பாதை யில் இதய சிகிச்சை மருத்துவக் குழுவினர் முகாமிட ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது.

தமிழகம், கேரளம் மற்றும் கோயில் சார்பில் 3 பொங்கல் வைக்கப்படும். தனி நபர்கள் பொங்கல் வைக்க அனுமதி இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், கோயிலுக்குச் செல்லும் நேரம் பிற்பகல் 2.30 மணி யுடன் முடிவதால் நெரிசல் ஏற்பட்டு பெரும் சிரமம் ஏற்படும். ஆகவே நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு: கூட்டம் தொடங்கியபோது கேரள செய்தியாளர்கள் அனு மதிக்கப்பட்டனர். ஆனால் தமிழக செய்தியாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகக் கூறி, கேரள போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் செய்தியாளர் கள் மறியலில் ஈடுபட முயன்றனர்.

இதனைத் தொடர்ந்து கூட் டத்தின் தொடக்கத்தில் புகைப்படம், வீடியோ மட்டும் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இதே போல் பெரியாறு வைகை பாசன சங்கம், மங்கல தேவி கண்ணகி கோட்ட சீரமைப்பு அறக்கட்டளை, கற்புக் கரசி மங்கலதேவி கண்ணகி அறக் கட்டளை உள்ளிட்ட சில அமைப் புகளுக்கு கூட்டத்தில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *