விருத்தாசலம் நகராட்சி கவுன்சிலர் திமுகவில் இருந்து நீக்கம்: துரைமுருகன் அறிவிப்பு

-ஊடகவியலாளர் இராகவேந்திரன்

விருத்தாசலம் நகராட்சி 30வது வார்டு கவுன்சிலரை திமுகவில் இருந்து நீக்கி துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”கடலூர் மேற்கு மாவட்டம், விருத்தாசலம் நகராட்சி 30வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பக்கிரிசாமி, கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையி்லும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி (Dismiss) வைக்கப்படுகிறார்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *