என்னது அம்மா திராவிட முன்னேற்ற கழகமா? என்னய்யா சொல்றீங்க..

வெங்கட்ராம்.

அதிமுக வில் நடந்த களேபரங்கள் முடிவுக்கு வரும் நிலையில் இருக்க இப்போது ஓபிஎஸ் அவர்கள் அடுத்து என்ன செய்ய போகிறார்கள் என்று பல்வேறு வதந்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. அவர் போய் சசிகலா அவர்களை சந்திக்கப்போகிறார். டிடிவி அவர்களை சந்தித்து அவரது கட்சியில் இணைந்து பணியாற்றப்போகிறார். இவ்வாறு பல்வேறு செய்திகள் வட்டமடித்துகொண்டு இருக்கின்றன. இவ்வாறு இருக்கையில், இன்று ஒரு தரமான செய்தி வந்தது. அது என்னவென்றால் அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்று ஒரு கட்சியை ஓபிஎஸ் அவர்கள் தொடங்கப்போவதாக தகவல் கிடைத்துள்ளது ஆனால் இதன் உண்மை தன்மை என்ன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இப்படி பாலால் வதந்திகள் பரவுவதற்கு பதிலாக ஓபிஎஸ் அவர்களிடம் இருந்து விரைவில் உண்மை செய்தியாக ஒரு அதிரடி நடவடிக்கையை மாநிலமே எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *