ஒரு சாதாரண தொண்டன் கூட முதலமைச்சராக முடியும்… ஈபிஎஸ் புலம்பல்…!

எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் தமிழகம் வளர்ச்சி பாதையை  கண்ட ஒரு ஆட்சியாக இருந்தது. தொடர்ந்து ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. ஏழைக் கல்வி களுக்கு சிறந்த கல்வி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஜெயலலிதா அவர்கள் கல்வியில் புரட்சியை ஏற்படுத்தினார். 

இலவசமாக மடிக்கணினி வழங்கி மாணவர்களுக்கு அறிவுபூர்வமான கல்வியை கொடுத்தவர் ஜெயலலிதா அவர்கள். ஆனால் மடிக் கணனி  வழங்காமல் மாணவர்களின் நலனை பாதுகாக்காத அரசு திமுக அரசாங்கம் ஆகும். நாட்டுக்காக சேவை செய்யக்கூடிய தொண்டர்கள் நிறைந்த இயக்கம் அதிமுக ,  ஆனால் திமுக என்பது ஒரு குடும்பக் கட்சி ஆகும். 

அதிமுகவில் ஒரு சாதாரண தொண்டன் கூட எம்எல்ஏ -வாகவும்,  எம்பி- ஆகவும்,  ஏன் முதலமைச்சராகவும் ஆக முடியும். இந்தியாவிலேயே ஜனநாயக அமைப்பு கொண்ட ஒரே கட்சி அதிமுக ஆகும். அதனால் தான் நான் இன்று சாதாரண தொண்டனாக இருந்து தற்போது பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன் . 

இது வேறு எந்த கட்சியிலாவது நடக்குமா?  என கேள்வி எழுப்பிய அவர், இது அதிமுகவில் மட்டுமே நடக்கும் , அதற்கு நானே உதாரணமாக இருக்கிறேன் என்றார். சேலம் ஒரு ராசியான மண். மாவட்டத்தைச் சேர்ந்த நாள் சாதாரண தொண்டனாக இருந்து ஒரு முதலமைச்சரானேன்,  தற்போது மிகப்பெரிய கட்சியின் பொதுச்செயலாளராகவும்  ஆகியுள்ளேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *