இனி யாரும் ஒரே வண்டியை 20 வருஷமா வெச்சிருக்கேன்னு சொல்லிடாதீங்க…உங்க வேண்டிய கொண்டுபோய் நசுக்கிடுவாங்க…
வெங்கட்ராம்.
உலகம் முழுவதும் புவி வெப்பமயமாவதை தடுக்க வேண்டும் என்று பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை பல்வேறு நாடுகள் ஒன்று சேர்ந்து எடுத்து வருகின்றன. அனால் வழக்கம்போல் அதில் பாதிக்கப்படப்போவது பெரும்பாலும் ஏழைகள் தான். இதற்க்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. அதன் தொடர்ச்சியாக இப்போது பதினைந்து ஆண்டுகள் ஆன அனைத்து வகையான வண்டிகளையும் செல்லாதாக்கி அதனை அழிக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஆனால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு எந்த ஒரு மாநில அரசும் இதனை இன்னும் செயல் பாட்டிற்கு கொண்டு வரவில்லை. ஆனால் டெல்லியில் இது செயல்பாட்டிற்கு வந்து விட்டது. அதுவும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுடன் வந்துள்ளது. இதனால் பதினைந்து ஆண்டுகள் ஆன வண்டியின் பதிவு என் தானாக காலாவதி ஆகி விடுகிறது. இதனால் அதை விற்க கூட இயலாது. இந்த திட்டத்தின் பயனை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.