கர்நாடக ல என்ன நடக்குது…பாஜக கட்சியை விட்டு போறாங்களா..

வெங்கட்ராம்.

இன்னும் ஒரு மாதத்தில் கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் ஜெயிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் காலத்தில் இறங்கியுள்ளன. ஒரு பக்கம் தேர்தல் போட்டி பயங்கரமாக செல்ல மற்றொருபக்கம் இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று மற்றோருபக்கம் தீவிரமான கள ஆய்வும் போய்க்கொண்டிருக்கிறது. இந்த கள ஆய்வில் வரும் முடிவுகளோ இப்போது ஆளும் கட்சிக்கு சாதகமாக இல்லாதவாறு இருக்கிறது. இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கிறது ஆளும் தரப்பு. இப்படி ஒரு விஷயம் சென்று கொண்டிருக்க இன்னொரு பக்கம் அந்த கட்சியிலிருந்து சில நிர்வாகிகளும் சட்டமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்து காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்து கொண்டு வருகின்ற்னர். கடந்த வாரத்தில் பாஜக எம்எல்சிக்கள் புட்டண்ணா, பாபுராவ் சின்சிஞ்சூர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸில் இணைந்தனர். இதைத் தொடர்ந்து மஜத எம்எல்ஏ சீனிவாஸ் அக்கட்சியில் இருந்து விலகி, தனது பதவியை ராஜினாமா செய்தார். இவரும் காங்கிரஸில் இணைந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று பெல்லாரி மாவட்டம் குடிலகி தொகுதி பாஜக எம்எல்ஏ என்.ஒய்.கோபாலகிருஷ்ணா, சட்டப்பேரவைத் தலைவர் விஸ்வேஸ்வர் ஹெக்டே காகேரியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். மேலும் இவர் பாஜகவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார். இதையடுத்து பெங்களூருவில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமாரை சந்தித்து பேசினார். அப்போது காங்கிரஸில் இணைவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *