தந்தை பெரியாரின் வைக்கம் போராட்ட நூற்றாண்டு நினைவு பேரணி..!

வைக்கம் வீரர் தந்தை பெரியாரின் வைக்கம் போராட்டத்தை நினைவு கூறும் வகையில் நூற்றாண்டு நினைவு பேரணி ஈரோட்டில் இருந்து வைக்கம் வரை நடைபெறுகிறது. ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் இருந்து இந்த பேரணியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் அமைச்சர் சு முத்துசாமி ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளனர். 

இந்த பேரணியில் ஈரோடு திருப்பூர் கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் மற்றும்   கேரள  காங்கிரஸ் கமிட்டி துணைச் செயலாளர் டி பல்ராம் பொதுச் செயலாளர் சி சந்திரன் ஆகியோரும் பங்கேற்று உள்ளனர்..

சமூக நீதிக்காகவும், தீண்டாமைக்கு எதிராகவும் கேரளத்தில் நடைபெற்ற மிக முக்கியமான போராட்டம் வைக்கம் போராட்டமாகும். அங்குள்ள  கோவிலிலும் அதனை சுற்றியுள்ள தெருக்களிலும்  தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் நுழைய அந்நாளில் அனுமதிக்கப்படவில்லை. சாதிய, தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக பெரியார் முன்நின்று நடத்தி வெற்றி கண்ட இந்த போராட்டம்,  1924-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30-ஆம் நாள்  தொடங்கி  603 நாட்கள் அமைதியான முறையில் நடைபெற்றது.  போராட்ட நாயகனாக விளங்கிய தந்தை பெரியார் வைக்கம் வீரர் என போற்றப்பட்டார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இப்போராட்டத்தின் நூற்றாண்டு விழாவினை  603 நாட்கள் சிறப்பாக கொண்டாட கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதன் தொடக்க விழாவில் கேரள, தமிழ்நாடு முதலமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.. 

விழாவின் தொடக்கமாக, வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியாரின் பங்களிப்பை போற்றி நினைவுகூறும் வகையில், அவர் பிறந்த ஊரான ஈரோட்டில் இருந்து வைக்கம் வரை பேரணி நடத்தப்படுகிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *