கே டி ராகவனை சந்தித்த முதல்வர்…என்னவா இருக்கும்….

வெங்கட்ராம்.

பாஜக கட்சியில் முதன்முதலில் வீடியோ மேட்டரில் சிக்கி பிரபலமானது கே டி ராகவன் தான். அனைத்து செய்தி ஊடகத்திலும் பாஜக வின் முகமாக தோன்றுவார் மற்றும் கல்லூரி பேராசிரியர் போன்ற அவருடைய தோற்றம் அவருக்கு பெரிய ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருந்தது. அனால் அவை அனைத்தும் ஒருநாள் மாலை வேலையில் ஒரு சமூக ஊடக செயற்பாட்டாளரால் சுக்கு நூறாக போனது. ஆம் அவரை பற்றின ஒரு தவறான வீடியோ நாடெங்கிலும் பரவி அவர் மனம் வெறுத்து தனது பதவியை ராஜினாமா செய்யும் நிலைமைக்கு சென்றது. அதன் பிறகு அவர் எந்த கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமலே இருந்தார். அவரை பற்றின ஒரு சிறிய செய்தி கூட வெளியில் வராமல் இருந்தது. தற்போது திடீரென்று முதல்வர் அவர்களை கே டி ராகவன் சந்தித்ததாக செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டன. நிலவரம் என்ன என்று விசாரிக்கும் போது உடல் நலப் பிரச்னையால் கே.டி.ராகவன் தற்போது அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுக எம்பி கனிமொழியின் கணவர் அரவிந்தனும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில் அவரைச் சந்தித்து நலம் விசாரிக்கச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், கே.டி.ராகவனையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து உள்ளார். கே.டி.ராகவன் பல முறை முதல்வர் ஸ்டாலினை மிக கடுமையாக விமர்சனம் செய்து பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் ஸ்டாலின்-ராகவன் சந்திப்பு பாஜகவினர் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *