முத்து முத்தாக 3 முக்கிய அறிவிப்புகள்.. குட் நியூஸ் சொன்ன ஸ்டாலின்

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

சென்னை: தமிழ்நாடு அரசு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. அதில் 1 அறிவிப்பு பெண்களையும், 2 அறிவிப்புகள் மாணவர்களையும் மையப்படுத்தி வெளியிடப்பட்டு உள்ளது.தமிழ்நாடு அரசு பட்ஜெட் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் பல முக்கியமான அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தன.அதை தொடர்ந்து வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

இன்றய பட்ஜெட் அறிவிப்புகளில் இடம்பெற்ற 3 முக்கியமான அறிவிப்புகள் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளன. அதன்படி மகளிர் உரிமைத்தொகை’ தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1000 வரும் நிதியாண்டும் முதல் வழங்கப்படும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மட்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இந்த அறிவிப்பை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் வெளியிட்டு உள்ளார். தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மட்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு மாதம் ரூ1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.இந்த உரிமைத் தொகை ஏழ்மையான குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே அளிக்கப்படும் என்றும் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2.15 கோடி ரேஷன் அட்டை உள்ளது. இதில் அனைத்திலும் குடும்ப தலைவிகளுக்கு பணம் கொடுப்பது இயலாத காரியம். இதனால் அரசுக்கு பெரிய அளவில் சுமை ஏற்படும். அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்தம் நபர்கள், சொந்த வீடு வைத்து இருப்பவர்கள் ஆகியோருக்கு இந்த உரிமைத்தொகை அளிக்கப்படாது என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *