“எப்படியாவது படிச்சிரு பரமா” மாணவர்களுக்கு ஸ்நாக்ஸ் -அசத்தும் மேயர் பிரியா!

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

சென்னை: நீட், ஜேஇஇ, கிளாட் போன்ற போட்டி தேர்வுகள் மூலம் வெல்லும் அரசு பள்ளி மாணவர்களின் முதலாம் ஆண்டு கல்வி கட்டணத்தை சென்னை மாநகராட்சியே ஏற்கும் என்று மேயர் பிரியா அறிவித்துளளார். இந்த அறிவிப்பு மற்ற ஊர்களில் நடந்தால் மிகப்பெரிய கல்வி புரட்சிக்கு வழிவகுக்கும் என்கிறார்கள் கல்வியாளர்கள்.20223-24ம் நிதியாண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்று Jee, clat, neet போன்ற போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அரசு கல்வி நிறுவனங்களில்சேரும் மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு கல்வி கட்டணம் முழுவதும் மாநகராட்சி செலுத்தும்.சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு மாலையில் சிறுதீனி எனப்படும் ‘ஸ்நாக்ஸ்’ வழங்கப்படும் . சென்னை பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரத்தில் நொறுக்குத் தீனி வழங்க மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி உடன் இணைத்த 139 பள்ளிகளுக்கு ரூ.15 கோடி செலவில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும். மாலைநேர வகுப்புகளில் பங்கேற்கும் 10 (ம) 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அவித்த சுண்டல், பயறு வகைகள் வழங்கப்படும்.

சென்னையில் 10 மேல்நிலை பள்ளிகளில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் ஆய்வகம் மேம்படுத்தப்படும். சென்னை மாநகராட்சி உள்ள அனைத்து பள்ளிகளிலும் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். பள்ளி மாணவர்களுக்கு கற்றம், கற்பித்தல் நடவடிக்கையில் மாதிரி ஐ.நா.சபை குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்மேயர் பிரியா அறிவித்துள்ள பல்வேறு அறிவிப்புகள் குறித்து கல்வியாளர்கள் கூறுகையில், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை மாநகராட்சி ஏற்பது எத்தனை சிறப்பான முன்னெடுப்பு. இதேபோன்று தமிழ்நாட்டின் அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் அறிவித்தால், மிகப்பெரிய கல்வி புரட்சிக்கு வழிவகுக்கும். அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏற்கனவே நீட் தேர்வில் வென்றால் எம்பிபிஎஸ் படிப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. இதனிடையே போட்டித்தேர்வில் வெல்லும் மாணவர்களின் முதலாம் ஆண்டு கல்வி செலவை மாநகராட்சியே ஏற்கும் என்ற அறிவிப்பு மிகப்பெரிய கல்வி முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது.

இந்த அறிவிப்பினை தமிழகம் முழுவதும் செயல்படுத்தினால் மிகப்பெரிய முன்னெடுப்பாக பார்க்கப்படும். படிப்பிற்கு மிகப்பெரிய முன்னெடுப்பு திமுக அரசு செய்து வருகிறது. அரசு பள்ளியில் படித்த மாணவிகள் கல்லூரிகள் சென்றால் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.இந்நிலையில் போட்டித்தேர்வுகளில் வெல்வதற்கு தனியார் மையங்களுக்கு நிகரான வசதிகளுடன் அரசே பயிற்சி வகுப்புகளையும் முன்னெடுத்துள்ளது. இந்த மையம் சென்னையில் மட்டுமே தற்போது உள்ளது. தமிழகம் முழுவதும் உருவானால் ஏராளமான ஏழைகள் அரசு வேலையிலும், மத்திய பணிகளிலும் சேர முடியும். அதேபோல் ஐஐடி போன்ற மத்திய கல்வி மையங்களில் சேர முடியும் அரசுக்கு இதற்கான அறிவிப்புகளையும் வெளியிட வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *