பறக்க ஆரமிச்சுருச்சு”கூண்டுக்கிளி” -பாஜக தலைவர் அண்ணாமலை

-ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

அதிமுக – பாஜக கூட்டணி குறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ள கருத்து, மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டு வருகிறது.. அத்துடன் நேற்றைய தினம், தன்னுடைய பேச்சில் புது தெம்பையும், நம்பிக்கையையும், பாஜக தொண்டர்களுக்கு புகுத்தியுள்ளதும், அரசியல் களத்தில் கவனம் பெற்று வருகிறது. இரட்டை இலை யாருக்கு என்று தெரியாமல் இருந்த நிலையில், திடீரென ஒருநாள் ஓபிஎஸ் + எடப்பாடி என இரு தரப்பையுமே சந்தித்து பேசியிருந்தார் தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியானதுமே “ஒருங்கிணைந்த, பலமான அதிமுகவையே பாஜக விரும்புகிறது என்று அதிரடியாக பேட்டி தந்தது, எடப்பாடி டீமுக்கு மேலும் கொதிப்பை தந்துவிட்டதாம்.. கூண்டை விட்டு கிளி வெளியே வரப்போகுதாமே.. அண்ணாமலை சூசகமாக சொன்ன ‘கதை

தன்னை கருணாநிதி, ஜெயலலிதா அளவுக்கு தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் ஆளுமையாக அண்ணாமலை கருதுவது அதிமுகவுக்கு மட்டுமல்ல, பாஜகவில் உள்ள சீனியர்கள் பலருக்கும் பிடிக்கவில்லை என்ற தகவல்களும் வலுவாகவே சுற்றிக் கொண்டிருக்கின்றன. குழப்பம் பாஜக தேசிய தலைவர் நட்டா வந்திருந்தபோதுகூட, “அதிமுகவுடன் சுமூகமாக செல்ல வேண்டும். அதிமுக தொண்டர்களுடன், தலைவர்களுடன் வம்பு வளர்க்க வேண்டாம். அதிமுக தலைமை குறித்து எந்த குறையையும் சொல்லக்கூடாது. இதை தமிழக பாஜக தலைவரும், நிர்வாகிகளும், தொண்டர்களும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்” என்று அறிவுறுத்தியிருந்த நிலையிலும்கூட, அதிமுகவுடன் கூட்டணியே வேண்டாம் என்று அண்ணாமலை கூறியிருந்தது, குழப்பத்தை அதிகப்படுத்தியதாகவே பார்க்கப்பட்டது.. மேலும், அண்ணாமலையின் செயல்பாடுகளுக்கு, மேலிடத்தின் ஆதரவு உள்ளதா என்ற குழப்பத்தில், அக்கட்சியின் தமிழக தலைவர்கள் இருப்பதாகவும் தெரிகிறது. அமித்ஷா இதனிடையே, அண்ணாமலை அனுப்பிய ராஜினாமா கடிதத்தை, பாஜக மேலிடம் ஏற்காததால், நேரடியாகவே டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசவிருப்பதாகவும் செய்திகள் பரபரத்த நிலையில்தான், அச்சந்திப்பு நடந்து முடிந்துள்ளது..

டெல்லியில் இருந்து திரும்பியுள்ள நிலையில், 2 விதமான மாற்றங்கள் அண்ணாமலையின் பேச்சில் தென்படுவதாக கூறுகிறார்கள்.. மதுரை ஏர்போர்ட்டில் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது, அதிமுக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். ஆதங்கம் அதற்கு அண்ணாமலை “பாஜக தேசிய தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, அமைப்பு செயலாளர் சந்தோஷ் உள்ளிட்டோரை டெல்லியில் சந்தித்தேன். தமிழகத்தின் அரசியல் களம் பல்வேறு விதமாக உள்ளது. அதில் பாஜக வளர்ச்சி எவ்வாறு இருக்கிறது? தமிழகத்தின் நிலை என்ன? போன்ற விபரங்கள் தொடர்பாக பேசுவதற்காக அவர்களை சந்தித்தேன். கூட்டணியை பொருத்தவரை எங்களுக்குள் எந்த குழப்பமும் இல்லை.. பாஜக மூத்த தலைவர்கள் இடம் பெற்றுள்ள பார்லிமெண்டரி குழு அதுகுறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அந்த குழுவே கூட்டணி தொடர்பான விஷயங்கள் குறித்து முடிவெடுக்கும். பாஜக கட்சிக்கோ, எனக்கோ தனிப்பட்ட முறையில் எந்த ஒரு கட்சியின் மீதும், எந்த ஒரு தலைவரின் மீது கோபமோ, ஆதங்கமோ எதுவும் இல்லை. எல்லா கட்சியினரும் அவரவர் கட்சி வளர்ச்சி வளர வேண்டும் என்று விருப்பப்படுவார்கள். ஒரு கூட்டணியில் இருந்தாலும் அது தான் தர்மம்” என்றார்.

நெஞ்சை நிமிர்த்தி அதேபோல, தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் அண்ணாமலை பேசியபோதும், “பாஜவினர் இதுவரை கூண்டுக்கிளியாக இருந்தது போதும்.. தமிழகத்தில் களம் மாறிவிட்டது.. உங்களால் பறக்க முடியும். எனவே கூண்டை உடைத்துக் கொண்டு பறக்க தயாராகுங்கள். நம்பிக்கையுடன் செயல்படுவோம். வரும் 2024 தேர்தலில் வெற்றிபெற அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். பாஜக ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் வந்து விட்டது தமிழகத்தில் புரட்சிக்கான நேரம் தயாராகிவிட்டது. நமக்கான நேரம் வந்துவிட்டது. பாஜகவினர் கூனி குறுகி வாக்கு கேட்க வேண்டிய நிலை எங்கும் இல்லை.. நெஞ்சை நிமிர்த்தி வாக்கு கேட்கலாம்.. இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சி 45 சதவீதத்திற்கும் அதிகமாகவே அரசு திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது” என்று பேசியிருக்கிறார்.. கிரேட் சேஞ்ச் அதாவது, “அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன்” என்று செக் வைத்து பேசியிருந்த அண்ணாமலை, தற்போது டெல்லி சென்றுவந்த நிலையில், “பார்லிமெண்டரி குழு முடிவு அனைத்தையும் செய்யும்” என்று சொல்லி உள்ளதும், கூண்டுக்கிளியாய் இனி இருந்தது போதும், கூண்டை உடைத்துக் கொண்டு பறக்க தயாராகுங்கள் என்று பேசியுள்ளதும், பலரையும் திரும்பி பார்க்க செய்து வருகிறது.. தன் பேச்சில் இப்படி ஒரு மாற்றம் வரும் அளவுக்கு டெல்லி தலைவர்கள் அண்ணாமலையிடம் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை என்றாலும், அதிமுகவும் அண்ணாமலை தரப்பினரும், இனி எவ்வாறு ஒருவருக்கொருவர் அணுக போகிறார்கள்? கூட்டணி குறித்து என்னென்ன முடிவு செய்ய போகிறார்கள்? இரு தரப்பிலுள்ள அதிருப்திகள் எல்லாம் எப்படி விலக போகின்றன என்பதெல்லாம் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக எகிறி வருகிறது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *