நீதித்துறையை துஷ்பிரயோகம் செய்துவிட்டு அப்பாவி நாடகம் ஆட வேண்டாம்….திமிரி எழும் திருமாவளவன்…

வெங்கட்ராம்.

ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்தது உள்ளது. அனைவரும் தங்களது கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொண்டு வருகின்றனர். காங்கிரசை எதிர்க்கும் சில மாநில கட்சிகள் கூட இந்த செயலை கண்டித்து பாஜகவுக்கு எதிரான அறிக்கைகளை பரக்கவிட்டு கொண்டிருக்கின்றன. நாட்டில் எங்கு அநீதி நடந்தாலும் அதை தட்டிக் கேட்கும் திருமாவளவன், இதனை சும்மா விட்டுவிடுவாரா என்ன? அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் இராகுல் காந்தி அவர்களின் மக்களவை உறுப்பினர் பதவியை அவசர அவசரமாக பாஜக அரசு பறித்திருப்பது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள மிகப்பெரிய தாக்குதலாகும். இந்திய நாட்டுக்குத் துரோகம் செய்த பொருளாதார மோசடிப் பேர்வழிகளுக்கு ஆதரவாக நீதித்துறையைப் பயன்படுத்தி தமது அரசியல் எதிரியைப் பழிவாங்கியிருக்கிறது பாஜக அரசு. சட்டப்படியே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என அப்பாவிப் பொதுமக்களை நம்பவைக்கும் வகையில் திட்டமிட்டு இந்த ஜனநாயகப் படுகொலையை பாஜக அரசு அரங்கேற்றியிருக்கிறது. என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *