கூல் கேப்டன் டென்சனாகிட்டார்! சொதப்பலான அரசியல் திட்டம்! -தடுமாறும் தினகரன்

அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தில், சரிவுகள் தென்பட துவங்கி உள்ள நிலையில், அதை ஈடுகட்ட தென்மண்டலங்களில் தன் பலத்தை பெருக்க துவங்கி உள்ளாராம் எடப்பாடி பழனிசாமி.. என்ன நடக்கிறது அதிமுகவுக்குள்?

சமீபகாலமாகவே, மாற்று கட்சிகள் குறிப்பாக, பாஜக, அமமுக, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த அதிருப்தியாளர்களுக்கு அதிமுக வலையை வீசிவருகிறது.

அதன்படி, அந்தந்த கட்சியில் பலவித காரணங்களுக்காக அப்செட்டில் புழுங்கி கொண்டிருந்தவர்கள், அதிமுகவில் எடப்பாடி முன்னிலையில் கட்சியில் சேர்ந்து வருகிறார்கள்.

தினகரன்

தினகரன்

இதில், அமமுக நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவது, தினகரன் தரப்பை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளதாம்.. அமமுக தலைமை நிலைய செயலாளரும், திருப்பத்தூர் முன்னாள் எம்எல்ஏவுமான கே.கே உமாதேவன், அமமுக செய்தி தொடர்பாளரும், மாநில இளைஞரணி செயலாளராக இருந்த கோமல் ஆர்.கே அன்பரசன், அமமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான கே.கே.சிவசாமி, அமமுக மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளர்கள், வர்த்தக அணி, இளைஞர் அணி, பொறியாளர் அணி, வழக்கறிஞர் பிரிவு, வெளிநாடு வாழ் தமிழர் நலப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் ஏற்கனவே இணைந்துவிட்டனர்.

புள்ளிகள்

புள்ளிகள்

நேற்றைய தினம், கடலூர் மாவட்டம், அமமுக அமைப்புச் செயலாளர் பாலமுருகன், திட்டக்குடி நகரச் செயலாளர் S. சக்திவேல், நகர பேரவைச் செயலாளர், ராஜாராம் செந்தில்குமார், மாவட்ட பொறியாளர் அணிச் செயலாளர் திரு. சுதாகரன், வி. சாந்தாமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் திரு. S. லட்சுமிகாந்தன், மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் ராஜசேகர், மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் கணேசன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து, தங்களை அதிமுகவில் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர்… ஒவ்வொருவராக தன்னை நாடி வந்தவர்களை, எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.

 தென்மண்டலம்

தென்மண்டலம்

இதற்கெல்லாம் காரணம், கொங்குவில் எடப்பாடி பழனிசாமியின் பலம், சற்று குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.. அதிமுகவின் கோட்டையாக கொங்குவை தொடர்ந்து தக்கவைக்கவும் முயன்றுவந்தாலும், திமுகவின் அசுர வேகத்திற்கு எடப்பாடியால் ஈடுகொடுக்க முடியாமல் திணறும் சூழலும் உருவாகி உள்ளது. அதிலும் செந்தில்பாலாஜியின் அரசியல் வியூகத்தை சமாளிக்க முடியாமல், எடப்பாடி கொங்கு தரப்பு கலக்கமாகி உள்ளதாம்.. அதனால், கொங்குவில் சரிந்த வாக்குகளை, தென்மண்டலத்தில் ஈடுகட்ட வேண்டிய நெருக்கடி எடப்பாடி தரப்புக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.. எனினும், வடமாவட்டங்களில் ஓரளவு அமமுக செல்வாக்கு பெற்றுள்ள நிலையில், அங்கேயும் “கை”யை வைத்துள்ள எடப்பாடி தரப்பு, இனி முழு கவனத்தையும் தென்மண்டல அமமுக பக்கம் செலுத்தக்கூடும் என்கிறார்கள்

ஹைஜாக்

ஹைஜாக்

அதுமட்டுமல்ல, தென் மாவட்டங்களில் அதிமுகவின் செல்வாக்கு குறைந்து வருவதாகவும், வரும் எம்பி தேர்தலில் தென் மாவட்டத்தில் அதிமுகவிற்கு ஓட்டு சதவிகிதம் பாதிக்கப்படும் என்றும் அரசியல் விமர்சகர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.. கடந்த சட்டமன்றத் தேர்தலை எடுத்து கொண்டால், 160 தொகுதிகளில் போட்டியிட்ட அமமுக, 10,85,985 வாக்குகளை பெற்றிருந்தது.. அதனால்தான், ஒருங்கிணைந்த அதிமுக என்ற விஷயத்தில் பாஜக தீவிரம் காட்டியும் வருகிறது.. இதற்கு பிடிகொடுக்காமல் எடப்பாடி நழுவி வரும்நிலையில், சொந்த செல்வாக்கை நிலைநிறுத்தும் முயற்சியில் இறங்கிஉள்ளார்.. அதனால்தான், அமமுகவை நிர்வாகிகளை அதிமுகவிற்கு இழுக்கும் நடவடிக்கை, கடந்த ஒரு சில வாரங்களில் மட்டும் அதிகரித்து வருகிறது.

 சீறும் பழனிசாமி

சீறும் பழனிசாமி

அந்தவகையில், தினகரன் தரப்பு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளதாக தெரிகிறது.. நேற்றுகூட திருவாரூரில் செய்தியாளர்களுக்கு தினகரன் தந்த பேட்டியில், “ஒருசிலரின் ஆணவம், அகங்காரம், பணத்திமிரால் அம்மாவின் இயக்கம் மிகவும் பலவீனம் அடைந்து வருகிறது. கடந்த 6 ஆண்டுகாலமாக ஒருசில சுயநலவாதிகளால் தமிழ்நாடு பாழடைந்துவிட்டது” என்று சீறியிருந்தார்.. ஒவ்வொரு பேட்டியிலும் அதிமுகவையும், எடப்பாடி பழனிசாமியையும் தினகரன் சாடிவந்தாலும், எடப்பாடி பழனிசாமியோ, இதுவரை அமமுகவையோ, அல்லது தினகரனையோ விமர்சித்ததே கிடையாது..

 ஏங்க நீங்க வேற

ஏங்க நீங்க வேற

“எம்ஜிஆர் கையில் இருந்த இரட்டை இலை சின்னம் இப்போது பிஎஸ் வீரப்பா கையில், எம்என் நம்பியார் கையில் உள்ளதாக சொல்கிறாரே, இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்” என்று சில தினங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டார்கள்.. அதற்கு அவர், “ஏங்க, அவரை ஒரு ஆளாகவே பொருட்படுத்தவில்லை அப்புறம் ஏன் பேசிக்கிட்டு” என்று சட்டென ஒற்றை வரியில் தினகரன் கேள்வியை அவாய்ட் செய்தார்.. அந்த கேள்விக்கு எடப்பாடி பதிலே சொல்லவில்லை என்றாலும், தினகரனை கடந்து செல்வதையே, தன்னுடைய பதிலாக வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *