3வது அணி.. அண்ணாமலை உறுதி? அதிமுக – பாஜக கூட்டணி ட்விஸ்ட்?

-ஊடகவியலாளர் இராகவேந்திரன்

அதிமுக – பாஜக கூட்டணி முறியும் பட்சத்தில் தமிழ்நாடு அரசியலில் என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. முக்கியமாக பாஜக என்ன மாதிரியான கூட்டணியை அமைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜக மாவட்ட செயலாளர்கள், அணி தலைவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாக கூறப்படும் சில விஷயங்கள்தான் தற்போது தமிழ்நாடு அரசியலில் ஹாட் டாப்பிக்காக உள்ளது. அதிமுகவை பற்றி கடுமையாக அண்ணாமலை சில விஷயங்களை பேசியதாக கூறப்படுகிறது. முக்கியமாக அவர் கூட்டணி குறித்து காட்டமாக கருத்துக்களை தெரிவித்து உள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்..கண் முன் வந்த கலவர காட்சிகள்..காவல்நிலைய கதவை தட்டிய இபிஎஸ் அணி காட்டம் அண்ணாமலை தனது பேச்சில், பாஜகவை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதற்கான திட்டம் என்னிடம் உள்ளது. ஆனால் அதை நிறைவேற்ற எனக்கு சுதந்திரம் வேண்டும். எனக்கு உரிய சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அதனால்தான் நான் ஒன்னும் மேனேஜர் இல்லை தலைவர் என்று கூறினேன். தமிழ்நாட்டில் நாம் வளர வேண்டும் என்றால் கூட்டணி வைக்க கூடாது. அதிமுகவை நம்பி இருக்க கூடாது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தேசிய தலைவர் சொன்னால் நான் பதவியை ராஜினாமா செய்து விடுவேன்.

கட்சியை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதை செய்ய சுதந்திரம் வேண்டும் என்று பேசி இருக்கிறாராம். திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன். கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன். கூட்டணி பற்றியை முடிவை எடுப்பேன்.. மற்றவர்களிடம் நாம் கைகட்டி நிற்க வேண்டியது இல்லை, திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விரும்பவில்லை, என்று அண்ணாமலை கூறி இருக்கிறாராம்.

அண்ணாமலை இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால் மட்டுமே கூட்டணி முறியும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அண்ணாமலையின் நிலைப்பாட்டை விட டெல்லி நிலைப்பாடு முக்கியம். பாஜக கூட்டணி விவகாரங்களில் டெல்லிதான் முடிவு எடுக்கும். அதனால் டெல்லி என்ன முடிவு எடுக்கிறது என்று பார்க்க வேண்டும். டெல்லி அதிமுக வேண்டாம் என்று முடிவு எடுத்தால் அண்ணாமலை நிலைப்பாடு வெற்றிபெறும். இல்லையென்றால் அதிமுக கூட்டணியே. தொடரும் ஒருவேளை அதிமுக கூட்டணி வேண்டாம் என்று டெல்லியும் முடிவு எடுத்து விட்டால் பாஜக புதிய கூட்டணி வைக்க நேரிடும். புதிய கூட்டணி அப்படி இருக்கும் பட்சத்தில் பாஜக அதிமுக, திமுக அல்லாத மூன்றாவது கூட்டணியை வேண்டுமானால் அமைக்கலாம். அதாவது பாஜக – பாமக – தேமுதிக – ஓபிஎஸ் – அமமுக இணைந்து 3வது அணி அமைக்க சான்ஸ் உள்ளது. பாமக திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்றுவிட்டது. அமமுகவை அதிமுக சேர்த்துக்கொள்ளாது. அதேபோல் தேமுதிகவை அதிமுகவை சேர்த்துக்கொள்வது கடினம். ஓபிஎஸ் கதையும் அப்படித்தான். அப்படி இருக்க பாஜக பெரும்பாலும் மூன்றாவது கூட்டணி அமைக்கலாம்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/annamalai-does-not-want-aiadmk-anymore-will-bjp-form-an-alliance-with-pmk-dmdk-ammk/articlecontent-pf881527-503462.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *