வீரமரணம் அடைந்த இராணுவவீரர் ஜெயந்த், நெகிழ வைக்கும் நிஜம்!

-ஊடகவியலாளர் இராகவேந்திரன்

அருணாசலபிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தேனியைச் சேர்ந்த ராணுவ அதிகாரி ஜெயந்த், சிறுவயதில் இருந்தே ராணுவத்தில் சேர வேண்டும் என்று கனவுகளுடன் வளர்ந்தவர் என்றும், துப்பாக்கி சுடும் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தவர் என்றும் அவரைபற்றி ஜெயமங்கலம் கிராமத்தினர் உருக்கமான தெரிவித்தனர். அருணாச்சல பிரதேசத்தில் உள்ள திராங் பகுதியில் இந்திய ராணுவத்தின் சீட்டா ரக ஹெலிகாப்டர் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது. அன்று காலை 9.15 மணிக்கு அந்த ஹெலிகாப்டர் மேற்கு போம்திலா அருகே மண்டலா மலைப்பகுதியில் மேலே பறந்து கொண்டிருந்தது. அப்போது விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது . கடைசியாக கிடைத்த ஜிபிஎஸ் சிக்னலை வைத்து ராணுவத்தினர் ஹெலிகாப்டரை தேடிக்கொண்டிருந்தனர்.

பகல் 12.30 மணியளவில் அந்த ஹெலிகாப்டர் அருணாச்சல் பிரதேச மாநிலத்தின் பங்ஜலிப் பகுதிக்கு அருகே விபத்துக்குள்ளானதாக அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறையினர் கொடுத்த தகவலை அடுத்து அங்கு வந்த ராணுவத்தினர் ஹெலிகாப்டரின் பாகங்களை கண்டுபிடித்தனர். இந்த ஹெலிகாப்டர் விபத்தில் அதில் பயணித்த 2 விமானிகளும் உயிரிழந்ததாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்தில் லெப்டினன்ட் வி.வி.பி.ரெட்டி, உதவி விமானி மேஜர் ஜெயந்த் ஆகிய 2 ராணுவ அதிகாரிகள் பலியானார்கள். இதில் ஜெயந்த் தேனி மாவட்டம், ஜெயமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். உயிரிழந்த லெப்டினன்ட் கர்னல் வினய் பானு ரெட்டி தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

ராணுவ கிராமம் மேஜர் ஜெயந்த் உயிரிழந்த தகவலை கேட்டு அவரது சொந்த ஊரான ஜெயமங்கலம் கிராமத்தினர் சோகத்தில் மூழ்கினர் ஜெயந்த் குறித்து பல்வேறு உருக்கமான தகவல்களை தெரிவித்தனர். ஜெயமங்கலம் கிராமத்தினர் கூறுகையில், எங்கள் கிராமத்தினர் முதல் இலக்கே ராணுவத்தில் சேருவதாகவே இருக்கும். எங்கள் கிராமத்தினர் பலரும் ராணுவத்தில் பணியாற்றுகிறார்கள். ஜெயந்த் எங்கள் கிராமத்தினரைப் போலவே ராணுவ வீரராக விரும்பினார். தமிழ்நாட்டில் சிறந்த என்.சி.சி கேடட்டாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், இது அவருக்கு ராணுவ அதிகாரி ஆவதற்கு வாய்ப்பளித்தது. பைலட் ஆனார் பள்ளியில் படிக்கும் போதே ராணுவத்தில் சேர வேண்டும் என்ற கனவுகளுடன் வளர்ந்த ஜெயந்த், பள்ளியில் படிக்கும் போதே பள்ளிப் பருவத்தில் துப்பாக்கி சுடும் வீரராக திகழ்ந்தார். துப்பாக்கி சுடும் போட்டியில் மாநிலத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். மதுரையில் எல்லீஸ் நகரில் உள்ள செவன்த் டே அட்வென்டிஸ்ட் பள்ளியில் பள்ளிப்படிப்பைப் படித்துவிட்டு, பெருங்குடியில் உள்ள சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் கணிதத்தில் பிஎஸ்சி முடித்தார். அதன்பின்னர் 2010ல் ராணுவத்தில் சேர்ந்தார், 2011ல் பீரங்கி படைப்பிரிவில் நியமிக்கப்பட்டார்.

ராணுவத்திற்கு இலகுவான ஹெலிகாப்டர்களை இயக்குவதற்கான பறக்கும் பயிற்சியை மேற்கொள்ள வாய்ப்பு கிடைத்ததும், அதை எடுத்து 2016ல் பைலட் ஆனார். அருணாச்சல பிரதேசம் ராணுவத்தில் சேர்ந்த பிறகு, ஜெயந்த் தனது பெற்றோர்களான ஆறுமுகம் மற்றும் மல்லிகாவை சென்னை குரோம்பேட்டையில் குடியமர்த்தினார். இவர் 2018ல் திண்டுக்கல்லை சேர்ந்த செல்லா சாரதாவை திருமணம் செய்து கொண்டார்.அவருடன் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ராணுவ தளத்தில் சாரதா தங்கியிருந்தார். ராணுவத்தில் சேர முடியவில்லை விடுமுறைக்கு வரும்போது எல்லாம் ஜெயந்த் ஜெயமங்கலம் வந்து பாட்டி தாத்தாவை பார்த்துவிட்டு செல்வார். சில மாதங்களுக்கு முன்பு பாட்டியை பார்த்துச் சென்றார். தற்போதுவிபத்தில் சிக்கி பலியாகி இருக்கிறார் என்று கிராமத்தினர் வேதனையுடன் தெரிவித்தனர்.

ஜெயந்தின் சித்தப்பா முருகன் கூறுகையில், என் அண்ணன் ஆறுமுகத்துக்கு இளம் வயதில் இருந்தே ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்காக அவர் முயற்சி செய்த போதிலும் அவரால் ராணுவத்தில் சேர முடியவில்லை. தனது ஒரே மகனை ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்று விரும்பினார். பெரிய இழப்பு பள்ளியில் படிக்கும் போதே, ஜெயந்தும் அப்பாவின் கனவும், தனது கனவும் ராணுவத்தில் சேருவது தான். நிச்சயம் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுவேன் என்று கூறினார். அவர் சொன்னபடியே ராணுவ அதிகாரியாக பணியாற்றினார். எதிர்காலத்தில் பல உயர் பதவிகளை அடைவார் என்று எதிர்பார்த்த எங்களுக்கு அவருடைய இந்த மரணம் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. எங்கள் குடும்பத்துக்கு இது பெரிய இழப்பு” இவ்வாறு வேதனையுடன் முருகன் கூறினார். அமைச்சர் இரங்கல் இதனிடையே லெப்டினன்ட் வி.வி.பி.ரெட்டி, உதவி விமானி மேஜர் ஜெயந்த் ஆகியோரின் மறைவுக்கு இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அருணாச்சல் பிரதேச மாநில முதலமைச்சர் பீமா காந்தா ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

அதேபோல் தமிழக முதல்வர் ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்தார். ஸ்டாலின் அறிக்கை முதல்வர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “வியாழக்கிழமை (16.03.2023) அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் ராணுவ பணியில் ஈடுபட்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ அலுவலர் மேஜர்.A. ஜெயந்த் உட்பட இரண்டு ராணுவ அலுவலர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்து வெள்ளி காலை என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருந்தேன். மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை, நேரில் சென்று, தாய்நாட்டைக் காக்கும் அரிய பணியில் தன் இன்னுயிரைத் தியாகம் செய்து, வீரமரணமெய்திய ராணுவ வீரரின் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக அஞ்சலி செலுத்திட அறிவுறுத்தினேன். தாய்நாடு காக்கும் பணியின்போது இன்னுயிர் ஈந்த மேஜர். A. ஜெயந்தின் குடும்பத்தினருக்கு மீண்டும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களுக்கு ரூபாய் இருபது லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அறிக்கையில் கூறியிருந்தார். உடல் கொண்டுவரப்பட்டது இந்நிலையில் அசாம் மாநிலம் தேஸ்பூரில் இருந்து ராணுவ விமானம் மூலமாக நேற்று இரவு 8 மதுரைக்கு மேஜர் ஜெயந்தின் உடல் கொண்டுவரப்பட்டது. மதுரைக்கு கொண்டு வரப்பட்ட மேஜர் ஜெயந்த் உடலுக்கு ஆட்சியர் அனீஷ் சேகர் அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்னர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம் கிராமத்திற்கு ராணுவ அதிகாரி ஜெயந்தின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்க அலுவலகம் முன்பு இருந்த மைதானத்தில் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. உடல் அடக்கம் ஜெயந்தின் உடலுக்கு கிராம மக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தினர். அரசு சார்பில் ஊரக வளர்ச்சி துறை மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் சஜிவனா, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு ஜெயந்தின் உடல் ராணுவ மரியாதையுடன் ஜெயமங்கலத்தில் உள்ள மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு 21 குண்டுகள் முழங்க அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *