மத்திய தொழிலக பாதுகாப்பு படை அக்னி வீரர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு!

-ஊடகவியலாளர் இராகவேந்திரன்

மத்திய தொழிலக பாதுகாப்பு படைகளில் (சிஐஎஸ்எப்) காலியாக உள்ள இடங்களில் சேருவதற்கு முன்னாள் அக்னி வீரர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும், சிஐஎஸ்எப் பணிகளில் சேருவதற்கான அதிகபட்ச வயது வரம்பில் முன்னாள் அக்னி வீரர்களுக்கு வழங்கப்பட்ட 10 சதவீத இடஒதுக்கீட்டில் விண்ணப்பிப்போருக்கு 5 ஆண்டுகளுக்கு கூடுதலாக தளர்வு அளிக்கப்படும். இந்த தளர்வு அக்னிபாத் திட்டத்தில் முதன்முதலாக சேர்ந்து ஓய்வுபெறும் படைப்பிரிவுக்கு மட்டுமே பொருந்தும்.

சிஐஎஸ்எப் வேலைக்கு சேர..: அதன் பிறகு, அக்னிபாத் திட்டத்தில் சேர்ந்து பணியாற்றி ஓய்வுபெற்று சிஐஎஸ்எப் வேலைக்கு சேர விண்ணப்பிக்கும் அடுத்தடுத்த படைப்பிரிவு அக்னி வீரர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

மேலும், சிஐஎஸ்எப் வேலைக்கு விண்ணப்பிக்கும் முன்னாள் அக்னி வீரர்களுக்கு உடல் தகுதி திறன் தேர்விலிருந்தும் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம்நேற்றுமுன்தினம் வெளியிட்டஅறிவிக்கையில் தெரிவித்துள்ளது.

சட்டத்தில் திருத்தம்: இந்த தளர்வுகளை வழங்குவதற்காக சிஐஎஸ்எப் சட்டம் 1968, மத்திய உள்துறை அமைச்சகத்தால் திருத்தப்பட்டுள்ளது. அக்னிபாத் திட்டத்திலிருந்து ஓய்வுபெறும் முன்னாள் அக்னி வீரர்களுக்கு எல்லை பாதுகாப்பு படையில் (பிஎஸ்எப்) சேருவதற்கும் மத்திய உள்துறை அமைச்சகம் இதேபோன்ற அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *