சூப்பர் நீயூஸ்: பத்து வருடமா தீர்க்க முடியாத பிரச்சனையை தீர்த்த இல்லம் தேடி எம்எல்ஏ திட்டம்…!

புதுக்கோட்டை அடுத்த உப்புபட்டி கிராமத்தில் 30 ஆண்டுகால பழமை வாய்ந்த மின் கம்பங்கள் பத்தாண்டு காலமாக பழுதடைந்து உடைந்து விழும் நிலையில் இருப்பதாக கூறி பலரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் நேற்றைய தினம் இல்லம் தேடி எம்எல்ஏ என்ற திட்டத்தின் அடிப்படையில் அந்த கிராமத்திற்கு சென்ற புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜாவிடம் கிராம மக்கள் மனு கொடுத்த நிலையில் இன்று அப்பகுதியில் புதிய மின் கம்பங்கள் மாற்றும் பணி நடைபெற்று வருவதால் எம்எல்ஏவுக்கும் தமிழ்நாடு முதலமைச்சருக்கும் அப்பகுதியினர் நன்றி தெரிவித்தனர்

புதுக்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா அத்தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு இல்லம் தேடி எம்எல்ஏ என்ற திட்டத்தின் அடிப்படையில் தினசரி சென்று பொதுமக்களை சந்தித்து அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று பின்னர் அந்த கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொண்டு மக்கள் பிரச்சனைக்கு தீர்வு கண்டு வருகிறார். 

அதன் ஒரு பகுதியாக நேற்று மாலை புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருமலைராயசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட உப்புபட்டி கிராமத்திற்கு இல்லம் தேடி எம்எல்ஏ என்ற திட்டத்தின் கீழ் சென்ற புதுக்கோட்டை எம் எல் ஏ முத்துராஜாவிடம் அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தங்கள் பகுதியில் உள்ள இரண்டு மின்கம்பங்கள் 30 ஆண்டு பழமை வாய்ந்தது அந்த மின்கம்பங்கள் கடந்த 10 ஆண்டு காலமாக பழுதடைந்து உடைந்து விழும் அபாயம் இருப்பதாக பலரிடம் கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் இதனால் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அதனால் இப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் 

அதேபோல் தங்கள் பகுதியில் மின் கம்பிகள் தாழ்வாக செல்வதால் வாகன ஓட்டிகள் அவதி அடைவதாகவும் அதனால் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் தங்கள் பகுதியில் உள்ள தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று கூறி மனு அளித்தனர். இதனையடுத்து மனுவை பெற்ற எம்எல்ஏ முத்துராஜா உடனடியாக அந்த மனுவுக்கு தீர்வு காண்பதாக உறுதி அளித்த நிலையில் இன்று காலையில் இருந்து சம்பந்தப்பட்ட உப்புபட்டி கிராமத்தில் உள்ள பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றி புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணியும் அதே போல் மின் கம்பிகள் உயர்த்தி கட்டும் பணியிலும் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் பத்தாண்டு காலமாக பலரிடம் கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நேற்று மாலை இல்லம் தேடி எம் எல் ஏ என்ற திட்டத்தின் அடிப்படையில் உப்புப்பட்டி கிராமத்திற்கு சென்ற புதுக்கோட்டை எம் எல் ஏ முத்துராஜாவிடம் மனு கொடுத்தவுடன் மறுநாள் காலையிலேயே தங்கள் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் புதிய மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு வருவதாக கூறி உடனடியாக நடவடிக்கை எடுத்த புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சருக்கும் அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *