ஓபிஎஸ், டிடிவியோடது குடும்பம்தான் கட்சி… கட்சிதான் குடும்பம்… எம்எல்ஏ ராஜன் செல்லப்பா சுருக்…

இனி ஓபிஎஸ், தினகரன் வேறு யாரோ இனிமேல் தனித்தனியாக இருக்க வேண்டுமே தவிர அவர்கள் தொண்டர்களை கெடுத்து விடக்கூடாது. மிக விரைவில் அந்த இரு கட்சியில் அவர் குடும்பத்தினரை தவிர வேறு யாரும் இருக்கப் போவதில்லை இனிமேல் அதிமுக எடப்பாடி தலைமையில் தான் அனைவரும் ஒன்றிணைவார்கள். -எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, அதிமுக தொண்டர்களுக்கு புதிய அடையாள அட்டை மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக வழங்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா அதிமுக கட்சி தொண்டர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறுகையில் அனைத்து கட்சிகளிலும் உட்கட்சி பிரச்சனை வருவது சகஜம் இதற்காக காவல் நிலையத்தில் நுழைந்து தாக்குவது அளவிற்கு விரிவு படுத்தி உள்ளது என்றால் அது திமுகவால் தான் முடியுமே தவிர வேற எந்த கட்சியாலும் முடியாது. 

கட்சி அலுவலகங்கள் திருமண மண்டபங்களில் இதுபோன்ற உட்கட்சி பிரச்சனை வந்துள்ளது. ஆனால் காவல் நிலையங்களில் உள்ளே சென்று தாக்குகின்ற நிலை வரலாற்றிலேயே இது போன்ற நடந்ததில்லை. திருச்சி மட்டுமல்ல தமிழகத்தில் முழுவதும் காவல் நிலையங்களில் திமுகவினர் ஆக்கிரமிப்பு அதிக அளவு உள்ளது என்பதற்கு இதுவே முன்னுதாரணம்.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி மீது முறையற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த செல்போனை பறித்து காவல்துறையிடம் ஒப்படைத்த பிறகும் இது போன்ற வழக்குகள் போடப்பட்டுள்ளது.

இது மிகப்பெரிய பொய் வழக்கு இதனுடைய விளைவு என்னவென்றால் இந்தியா கண்டத்திலேயே உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் இதுபோன்ற அவதூறுகள் நடக்கின்ற சூழ்நிலை ஏற்படுகிறது. மதுரை விமான நிலையம் மட்டுமல்ல இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் அந்த நபரை அனுமதிப்பதை தடுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை அவர்களுக்கு தண்டனை அதுதான் பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும்.

ஆவின் பால் பற்றாக்குறை குறித்த கேள்விக்கு மக்கள் அத்தியாவசியமாக பயன்படுத்துவது பால். அமைச்சர் குற்றமா அல்லது நிர்வாகக் குற்றமா என்று தெரியவில்லை. அமைச்சர் கல் எறிந்ததற்கே தற்போது வரை வழக்கு தொடுக்கவில்லை. நாசர் மீது வழக்கு தொடுக்க வேண்டும். இனி ஓபிஎஸ் தினகரன் வேறு யாரோ இனிமேல் தனித்தனியாக இருக்க வேண்டுமே தவிர அவர்கள் தொண்டர்களை கெடுத்த விடக்கூடாது. மிக விரைவில் அந்த இரு கட்சியில் அவர் குடும்பத்தினரை தவிர வேறு யாரும் இருக்கப் போவதில்லை இனிமேல் அதிமுக எடப்பாடி தலைமையில் தான் அனைவரும் ஒன்றிணைவார்கள்.

பொதுத்தேர்வில் தமிழ் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை இன்று ஆங்கிலத்தில் நாற்பதாயிரம் மாணவர்கள் எழுதவில்லை என்று சொன்னால் அதனை இன்றைய பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆய்வு செய்ய வேண்டும் என்று அறிகிறோம். 

கல்வியாளர்கள் இதனை ஆய்வு செய்து சரியான அறிவுரைகளை கூறி தமிழக அரசு சிறப்பாக செயல்பட வேண்டிய நிலைக்கு வந்துள்ளது. இது அரசு குறைபாடா அல்லது நிர்வாகம் என்பதை ஆசிரியர்கள் குறைபாடு அல்லது மாணவர்கள் குறைவான என்பதனை ஆய்வு செய்ய வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனையில் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பு ராமநாதபுரத்தில் இருந்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்ற முயற்சி செய்தேன். அதைக் கூட அவர்கள் முயற்சி செய்யவில்லை.

மதுரையில் இருக்கக்கூடிய இரண்டு அமைச்சர்கள் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் நிதியை அதிகரித்துள்ளோம் என கூறுகின்றனர் ஆனால் இன்றைக்கு பதிவாளர் அலுவலகத்தில் தமிழக முழுவதும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்துள்ளனர். இவர்கள் எந்த வகையில் வருவாயை கூட்டினாலும் அது யாருக்காக பயன்படுகிறது. இதுவரைக்கும் பயன்படுகிறது கூட்டப்பட்ட வருவாய் மதுரை மாவட்டத்திற்கு பயன்பட்டதாக தெரியவில்லை என ராஜன்செல்லப்பா கூறினார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *