தொண்டர்களை நாங்களே நீக்குவோம்… சேர்ப்போம்… கன்பியூஸ் ஆன பாஜக…!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படத்தை எரித்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் தினேஷ் ரோடி கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டது ரத்து செய்யப்படுவதாக பாஜக மாநில பொதுச் செயலாளர் கன்னியாகுமரி பெருங்கோட்டை பொறுப்பாளருமாக பொன் பாலகணபதி அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இனாம் மணியாச்சி பகுதியில் கடந்த 7ம் தேதி முன்பு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி மாவட்ட தலைவர் தினேஷ் ரோடி கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம்  செய்யப்படுவதாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் அறிவித்திருந்தார் 

இந்நிலையில் இன்று  அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக பாஜக மாநில பொதுச் செயலாளரும்  கன்னியாகுமரி பெருங்கோட்ட பொறுப்பாளருமாக பொன் பாலகணபதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *