ஜெயலலிதா கேக் வெட்ட, எம்ஜிஆர் ஊட்டி விட… ரத்தத்தின் ரத்தங்களின் புது வைரல் மொமண்ட்

ஜெயலலிதா கேக் வெட்ட எம்ஜிஆர் கேக்கை ஜெயலலிதாவிற்கு ஊட்டி விட ரத்தத்தின் ரத்தங்கள் கைதட்டி ஆரவாரம் செய்த நிகழ்வு அன்னவாசலில் நடைபெற்றது.

ஜெயலலிதா, எம்ஜிஆர் வேடமணிந்தவர்களுடன் ஜெயலலிதாவின் 75 ஆம் ஆண்டு பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர். புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற விழாவில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வேடமனிந்து சினிமா பாடல்களை பாடி அதற்கு தகுந்தார் போல் நடன கலைஞர்கள் நடனமாடினர்

இதன் பின்னர் கேக் வெட்டும் நிகழ்வு நடைபெற்றது இதில் அச்சு அசல் போல் ஜெயலலிதா வேடமணிந்தவர் மற்றும் எம்ஜிஆர் வேடமணிந்தவர்கள் விஜயபாஸ்கருடன் இணைந்து பிறந்தநாள் விழா கொண்டாடினார். இதில் ஜெயலலிதா வேடமணிந்தவர் கேக் வெட்ட எம்ஜிஆர் கேக்கை எடுத்து ஜெயலலிதாவிற்கு ஊட்டி விட்டார் இதன் பின்னர் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் ஆகியோர் விஜயபாஸ்கருக்கு கேக்கை ஊட்டி விட்ட ருசிகர சம்பவமும் நடைபெற்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *