நம்மை திட்டத்திட்டதான் வைரமாக ஜொலிக்கிறோம்… ஓப்பனாக பேசிய முதல்வர் 

மாற்றுக்கட்சியனர் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் மு க ஸ்டாலின் எழுச்சி உரை, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் அதிமுக உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சியினர் 10 ஆயிரம் பேர்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  திமுகவில் இன்று இணைந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை  சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். பின்னர் கோவை சின்னியம்பாளையத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் அதிமுக, மய்யம், தேமுதிக, அமுமுக உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சியினர் 10 ஆயிரம் பேர் திமுகவில் இணையும் விழா  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. செல்வராஜ் அதிகார பூர்வமாக தனது ஆதரவாளர்களுடன் இன்று திமுகவில் இணைந்தார். அதே போல் பல்வேறு கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் திமுகவில் இணைந்தனர்.

இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

கோவை செல்வராஜ் அவர்கள் அண்மையில் தாய் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். மாற்று கட்சி  பல ஆயிரம் பேர் தங்களை தாய் கழகத்தில் இணைத்துக் கொள்ள உள்ளார்கள். அதற்கு நீங்கள் தேதியை வழங்கிட வேண்டும் என செல்வராஜ் அடிக்கடி கேட்டுக் கொண்டார். கோவை மாவட்டத்தின் பொறுப்பு மற்றும் மின்சாரத் துறை அமைச்சருமான செந்தில் பாலாஜியும் கேட்டுக் கொண்டார். இடையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வந்த காரணத்தால், அதிலே முழு கவனத்தை செலுத்த வேண்டிய காரணத்தால் அவர்களது வேண்டுகோளை உடனடியாக நிறைவேற்ற முடியாமல் இன்றைக்கு இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 

உங்களையெல்லாம் சந்திக்கக்கூடிய ஒரு நல் வாய்ப்பை பெற்றதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். பெருமைப்படுகிறேன். நம்முடைய செல்வராஜ் ஏற்கனவே நம்முடைய இயக்கத்தில் சேர்ந்து இருந்தாலும், இன்றைக்கு அவருடைய சீரி முயற்சியோடு நம்முடைய மாவட்ட கழக முன்னோடிகளின் ஒத்துழைப்போடு ஆயிரக்கணக்கில் ஏறக்குறைய 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள்  அதிமுக, தேமுதிக போன்ற பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்துள்ளனர். 

உங்களையெல்லாம் முதலில் நான் தலைமைக் கழகத்தின் சார்பில் வருக வருக என வரவேற்கிறேன். நம்முடைய செல்வராஜ் எப்படிப்பட்ட செயல்வீரர், எப்படிப்பட்ட பேச்சாளர், தொலைக்காட்சிகளில் விவாத மேடைகளில் எத்தகைய ஆற்றலோடு பங்கேற்பார் என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரியும். அவர் அதிமுகவில் இருந்த பொழுது தொலைக்காட்சிகளில் அவர் விவாதம் மேடையில் பங்கேற்ற காட்சிகள் எல்லாம் நான் பார்த்து இருக்கிறேன். அப்படி பார்த்துக் கொண்டிருக்கபொழுது பல்வேறு நபர்கள் அதிமுக சார்பில் விவாதம் செய்திருக்கிறார்கள்.  சில நேரங்களில் எனக்கு கோபம் வரும், ஏன் ஆத்திரம் வரும். 

ஆனால் செல்வராஜ் பங்கேற்க போது ஆத்திரமோ கோவமோ வராது. ஏனென்றால் உள்ளொன்று வைத்துக் கொண்டு அவர் வெளியிலே ஒன்று பேசுவது  என்பது கிடையாது. வெளிப்படையாக பேசக்கூடியவர். அவர் சொல்லக்கூடிய வாதத்தை அழுத்தமாக பேசக் கூடியவர். சில நேரங்களில் நம்மை திட்டி பேசியிருக்கிறார்.  நம்மளை திட்டத்திட்ட தான் நம் இன்றைக்கு வைரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறோம். அவரே சொன்னார் கிளுகிளுப்பு காரணிடம் ஏமாந்து  தாய்க்கழகத்திற்கு தாயைத் தேடி வந்திருக்கிறோம் என்று சொன்னார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *