கஜினி முஹமது கதையாகிபோன ஆன்லைன் ரம்மியும்… ஆளுநர் ரவியும்…

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை திருப்பி அனுப்பிய தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை கண்டித்தி உதகையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்ட போராட்டம். உதகையில் தங்கி உள்ள ஆ.என்.ரவி இன்று காலை குடும்பத்தோடு கேரளா மாநிலம் வயநாடு கிளம்பி சென்ற நிலையில் சிபிஎம், சிபிஐ கட்சியினர் தாவரவியல் பூங்கா முன் ஆர்ப்பாட்டம் செய்ய முன்ற போது கைது செய்யபட்டனர்.

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கடந்த 7 ஆம் தேதி 5 நாள் பயணமாக உதகைக்கு வந்தார்.மூன்று நாட்கள் ராஜ்பவனில் தங்கிய அவர் இன்று காலை ராஜ்பவனில் இருந்து குடும்பத்தினருடன் மசினகுடி  வழியாக கேரள மாநிலம் வயநாடு செல்ல திட்டமிட்டிருந்தார். இதனிடையே தமிழக அரசு அனுப்பி வைத்த ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய விவகாரத்தை கண்டித்து இன்று காலை ஆளுநர் வயநாடு செல்லும் போது சிபிஎம் சிபிஐ சார்பாக கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக ஆளுநர் செல்லும் முக்கிய நுழைவாயிலான அரசு தாவரவியல் பூங்காவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு இன்று காலை முதல் போடப்பட்டிருந்ததுடன்  ஆளுநர் கிளம்பும் வரை நடை பயிற்சிக்கு தடை தடைவிதிக்கப்பட்டிருந்தது.

மேலும் தாவரவியல் பூங்கா சாலையில் எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை.

இதனிடையே  காலை 7.35 மணிக்கு ஆளுநர் குடும்பத்தோடு வயநாடு புறப்பட்டு சென்றார். ஆளுநர் சென்ற பிறகு தாவரவியல் பூங்கா முன்பு வந்த சிபிஎம், சிபிஐ மற்றும் மக்கள் அதிகாரத்தை  சார்ந்த 16 பேர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் கைது செய்யப் போகின்ற போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீஸா இருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது அதனை அடுத்து 16 பேரும் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *