ஈபிஎஸ், ஓபிஎஸ் இரண்டு தரப்பும் ஒன்னா வந்தா என்ன செய்ய முடியும்…! நீதிமன்றம் கேள்வி

சிவகங்கை மாவட்டம், கீழ்பதி கிராமத்தில் தனியார் நிலத்தில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ளும் அதிமுக ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுக்கு அனுமதி வழங்க கோரிய வழக்கு. எடப்பாடி பழனிச்சாமி தரப்பும், ஓ பன்னீர்செல்வம் தரப்பும் ஒரே நேரத்தில் அனுமதி கேட்டதால் முடிவு எடுப்பதில் கால தாமதம் என அரசு தரப்பு விளக்கம்

இபிஎஸ் தரப்பு பொதுக்கூட்டம் மற்றும் ஓபிஎஸ் தரப்பு ஆர்ப்பாட்டம் அனுமதி வழங்குவது குறித்து சிவகங்கை காவல்துறை துணை கண்காணிப்பாளர் இன்று மாலை 6:00 மணிக்குள் உரிய முடிவு எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதில், “முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 75வது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் விதமாக மார்ச் 11ஆம் தேதி சிவகங்கை மாவட்டம், கீழ்பதி கிராமத்தில் தனியார் நிலத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் மற்றும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ளும் அதிமுக பொதுக்கூட்டம், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடத்த உள்ளோம். இதற்காக 2 முறை காவல் நிலையத்தில் அனுமதி கோரி மனு அளித்தோம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை‌.

எனவே, சிவகங்கை மாவட்டம், கீழ்பதி கிராமத்தில் தனியார் நிலத்தில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ளும் அதிமுக பொதுக்கூட்டம் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார். இதே போல் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்த ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் கே.ஆர்.அசோகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளைகள் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அதிமுக சிவகங்கை மாவட்ட செயலர், கட்சி உறுப்பினர்கள், மூத்த தலைவர்கள் கலந்து கொண்டு கட்சியினில் இருக்கும் மோதல்களை தவிர்ப்பதற்காக சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.” என மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பிறந்தநாள் விழாவிற்கு வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ளும் நிகழ்வு அன்று அவருக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளது. என தெரிவிக்கப்பட்டது. இதனால் கால தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கபட்டது.

எடப்பாடி பழனிச்சாமி திறப்பில் மூத்த வழக்கறிஞர் நடராஜன் இந்த பொதுக்கூட்டம் தனி இடத்தில் நடத்தப்படுவதால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இல்லை என வாதிட்டார் Ops தரப்பில் மூத்த வழக்கறிஞர் செல்லப்பாண்டியன் பேசுவையில் எங்கள் தரப்பு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கூறப்பட்டுள்ளது இதில் ஏதும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இல்லை என தெரிவித்தார்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இரண்டு தரப்பு அனுமதி கூறப்பட்டுள்ளதால் முடிவெடுக்க கால அவகாசம் கேட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதி இபிஎஸ் தரப்பு பொதுக்கூட்டம் மற்றும் ஓபிஎஸ் தரப்பு ஆர்ப்பாட்டம் அனுமதி வழங்குவது குறித்து சிவகங்கை காவல்துறை துணை கண்காணிப்பாளர் இன்று மாலை 6:00 மணிக்குள் உரிய முடிவு எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *