அண்ணாமலை என்றும் அரசியலில் எல்கேஜிதான்… ஆம் ஆத்மியின் மாநில தலைவர் கிண்டல்

பாஜக கார்ப்பரேட் கம்பெனிகளின் கைக்கூலியாக செயல்படுகிறது என ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர் ரசிகரன் குற்றச்சாட்டு. ஆம் ஆத்மி கட்சி விடுதலை தமிழ் புலிகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சேர்ந்து கும்பகோணம் பழைய மீன்கள் இன்று மதியம் மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அதில் ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர் வசீகரன் விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதனைத் தொடர்ந்து  ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர் வசீகரன் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பாரதிய ஜனதா கட்சி கார்ப்பரேட் கம்பெனிகளின் கைக்கூலியாக செயல்படுகிறது என்றும் எரிவாயு விலை உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு ஆகியவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் . தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த பாஜக தயாராகி வருகிறது என்றும், தமிழக மக்களிடையே உள்ள ஒற்றுமையை பிளவுபடுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. அண்ணாமலை இறக்குமதி செய்யப்பட்ட பாஜகவின் மாநில தலைவர் என்றும் இவர் அரசியலில் எல்கேஜி என்றும் வசீகரன் தெரிவித்தார்.

வட மாநிலத்தவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே கலவரத்தை ஏற்படுத்திட வேண்டும் என்பதற்காக BJP திட்டமிட்டுள்ளது என்றும், அண்ணாமலை பெட்ரோல், சமையல் எரிவாயு விலை உயர்வு பற்றி பேச மாட்டார்.  தமிழகத்தில் பாஜகவை மண்ணோடு மண்ணாக்கும் வரை விடமாட்டோம் என்றும் வசீகரன் தெரிவித்தார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மணி சிசேடியாவை விடுதலை செய்ய வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் . அதனை வரவேற்கிறோம். தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் வசீகரன் தெரிவித்தார்.

குஜராத்தில் ஆம்ஆத்மி காங்கிரஸ் உடன் சேராமல் தனித்துப் போட்டியிட்டதால்தான் பாஜக மீண்டும் வெற்றி பெற முடிந்தது என செய்தியாளர்கள் கேட்டதற்கு, இதனால்தான் காங்கிரஸ் கட்சியினர் எங்களை பிஜேபியின் பி டீம் என்கிறார்கள் . உண்மையில் பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரே கட்சி ஆம் ஆத்மி கட்சி தான் என்றும் , டில்லியில் ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல் மணி சிசோடியா கைது வரை அதிகமாக பாதிக்கப்பட்டது ஆம் ஆத்மி கட்சி தான் என்றும் வசீகரன் தெரிவித்தார்.

முன்னதாக கும்பகோணம் பழைய மீன் அங்காடி அருகே மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வசீகரன் கலந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *