தப்பி ஓடிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான்! காவல்துறை வலைவீச்சு

-ஊடகவியலாளர் இராகவேந்திரன்

பெண் நீதிபதியை அவதூறாக பேசிய வழக்கில் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்து விசாரிப்பதற்காக சென்ற நிலையில் ‘தான் திட்டமிட்டு அவ்வாறு பேசவில்லை என்றும், நான் பேசியதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் இம்ரான்கான் கருத்து’ தெரிவித்து உள்ளார்.

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்தபோது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு சென்றதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் ஆட்சி கலைக்கப்பட்டு இம்ரான் கான், இப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் இம்ரான் கான் பேசுகிற போது, பெண் நீதிபதியை அவதூறாகவும், உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் கொடுக்கும் வகையிலும் பேசி இருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நீதிபதி மற்றும் காவல் துறை அதிகாரிகள் இம்ரான் கான் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர்.

தீவிரவாத தடுப்பு மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இம்ரான் கானின் மீது சுமத்தப்பட்டு இருந்தது.
எந்த நிலையில் வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்கிற சூழலில், முன் ஜாமீன் பெற்ற இம்ரான் கான் ‘தான் திட்டமிட்ட அவ்வாறு பேசவில்லை என்றும் தான் பேசியதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் தற்போது கூறி இருக்கிறார்’ அவரை கைது செய்வதற்காக காவல்துறையினர் சென்றபோது அவர் தன்னுடைய வீட்டில், அலுவலகத்திலும் இல்லாமல் தப்பி சென்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *