பரபரக்கும் போலி வீடியோ…. மு.க. ஸ்டாலின் தேஜஸ்வி யாதவ் உறவை முறிக்க சதியா…..

Stalin

வெங்கட்ராம்


திடீரென்று பீகாரைச் சேர்ந்த இளைஞர்களை தமிழகத்தில் தாக்குவது போல் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. அவையாவும் போலி என்று காவல்துறையினராலும் தமிழக அரசாலும் நிரூபிக்கப்பட்டுவிட்டது. இது வழக்கம்போல சாதாரண ஒரு போலி வீடியோ என்று கடந்து செல்ல இயலாது. இதற்குப் பின்னாடி ஒரு பெரிய அரசியல் சதி இருக்குமோ என்ற எண்ணம் தோன்றுகிறது. இந்திய அரசியலைப் பொறுத்தவரை பிரிவினைவாத அரசியல் ஒரு பெரிய பங்கு ஆற்றி இருக்கிறது.

தமிழகத்தை தவிர ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும் மொழி சார்ந்த பிரிவினை வாதம் பெரும்பங்கு ஆற்றுகிறது. தமிழகத்தில் மட்டுமே திராவிடம் என்னும் கொள்கை சார்ந்த அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த பிரிவினை வாதம்தான் பல அரசியல்வாதிகள் பிழைப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்தப் பிரிவினைவாதம் தளர்ந்து மக்கள் ஒன்றுகூடிவிட்டால் அராஜகக்காரர்களின் ஆட்டம் அடங்கிவிடும். ஆகையால் அந்தப் பிரிவினைவாத எண்ணத்தை மட்டும் அடங்காமல் சில அரசியல்வாதிகள் பத்திரமாக பார்த்துக் கொள்வார்கள். தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளில் பீகார் உட்பட அனைத்து மாநிலக் கட்சிகளின் தலைவர்களையும் ஒரே மேடையில் ஒன்றிணைத்தார்.

அதில் குறிப்பாக பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் அவர்களின் பேச்சு மக்களின் கவனத்தை ஈர்த்தது. தமிழக மக்களுக்கு அவர் என் மீது பெரிய மரியாதை உண்டானது. இதனை கவனித்த சில தீய சக்திகள், இதுபோன்று மக்கள் ஒன்றிணைவது நம்மை போன்ற தீய சக்திகளுக்கு ஆபத்து என்று தெரிந்து வேண்டுமென்றே விஷால் தனமான இந்த வீடியோவை பரப்பி வருகின்றனர். ஆனால் எந்த ஒரு செயலையும் அறிவாளிதம் வைத்து எதிர்கொள்ளும் தமிழ்நாடு இந்த திட்டத்தை தகடு பொடி ஆக்கியுள்ளது. அறிவாயுதம் மட்டுமே ஏந்துவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *