‘பாஜக என்றால் வன்முறைதான்…’ எம்.பி. சு.வெங்கடேசன் சாடல்…!

கலவரத்தை உருவாக்குபவர்கள்,  வன்முறையை தூண்டுபவர்களை பாதுகாக்க மோடி இருக்கிறார் என்ற தைரியத்தில்தான் சுட்டுதள்ளுங்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார் – மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பேச்சு. சுதந்திர போராட்ட வீரர் கே.பி.ஜானகி அம்மாள் 31ஆவது நினைவு தின பொதுக்கூட்டம் மதுரை விளாங்குடி பகுதியில் நடைபெற்றது. 

இதில் கலந்துகொண்ட மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசியபோது : தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் பேசியபோது “உங்கள் கையில் துப்பாக்கி இருக்கிறது, துப்பாக்கியில் தோட்டா இருக்கிறது உத்தரவு தர மோடி இருக்கிறார். சுட்டுத்தள்ளுங்கள் உங்களை காப்பாற்ற தமிழக பாஜக இருக்கிறது என்கிறார், தமிழக அரசியல் வரலாற்றில் எந்த அரசியல் தலைவராது இப்படி பேசி இருப்பாரா? சட்ட ஒழுங்கு காப்பாற்றப்பட வேண்டும் சமூக அமைதி காப்பாற்றப்பட வேண்டும் மக்களின் வாழ்நிலை காப்பாற்ற வேண்டும் என்று தான் தமிழ்நாட்டினுடைய அரசியல் தலைவர்கள் பேசியுள்ளார்கள் 

முதல் முறையாக ஒரு கட்சியினுடைய மாநில தலைவர் பொது நிகழ்வில் உங்கள் கையில் துப்பாக்கி இருக்கிறது துப்பாக்கியில் தோட்டா இருக்கிறது உத்தரவு கொடுக்க மோடி இருக்கிறார் சுட்டு தள்ளிவிட்டு வாருங்கள் உங்களை பாதுகாக்க பாஜக இருக்கிறது என்று அண்ணாமலை பேசியுள்ளார் 

இது போன்று அவர் மட்டும் பேசவில்லை இதே வசனத்தை டெல்லியில் 2  ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி சட்டமன்ற தேர்தலின் 6 மாதத்திற்கு முன்பு இதே வசனத்தை மத்திய அரசின் உள்துறை இணைய அமைச்சர் அனுராக் தாகூர் பேசினார் சுட்டுத்தள்ளுங்கள் என்று சொன்னார் இதையடுத்து சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்பதற்காக உருவாக்கப்பட்ட அந்த கலவரத்தால் பலர் உயிரிழந்தார்கள் கோடிக்கணக்கான மதிப்பிலான பொருட்கள் இழப்பு ஏற்பட்டது

மத்திய இணை அமைச்சரின் பேச்சு குறித்து நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக கேள்வி எழுப்பினோம்,

மத்திய அமைச்சர் இது தொடர்பாக பேசலாமா என சரியா என கேள்வி கேட்டோம் ஆனால் உடனடியாக நாட்டின் பிரதமர்  என்ன நடவடிக்கை எடுத்தார் தெரியுமா? சுட்டுத் தள்ளுங்கள் என்று என்று பேசிய மத்திய இணை அமைச்சரை கேபினட் அமைச்சராக பதவி வழங்கினார்..

இப்பொழுது தெரிகிறதா ஏன் அண்ணாமலை இப்படி பேசினார் எசுட்டு தள்ளுவோம் என்று பேசினால் வன்முறையை தூண்டினால் கலவரத்தை உருவாக்கினால் அவர்களை பாதுகாக்க மோடி இருக்கிறார் என்பதால் தான். இவர்களின் எண்ணம் அமைதி அல்ல!! வளர்ச்சி அல்ல இவர்களின் அரசியல் சமூக அமைதி அல்ல என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *